மராட்டியத்தில் மழைக்கு 64 பேர் பலி: 1.5 லட்சம் பேர் வெளியேற்றம்;ஆந்திராவுக்கு புதிய புயல் ஆபத்து
மராட்டியம், குஜராத் மற்றும் ஆந்திராவில் பலத்த மழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மழையால் மும்பை நகரம் 3-வது நாளாக தத்தளிக்கிறது. மின்சார ரெயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் உள்ள புல்தானா, ஜால்னா, ஹிங்கோலி, நான்டட், யாத்வாமல் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளன. நாசிக் நகரமும் மழையால் சிக்கி தவிக்கிறது.
மாநிலம் முழுவதும் 19 மாவட்டங்களில் உள்ள 685 கிராமங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி உள்ளது. அங்குள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
50லட்சம் ஏக்கர் விவசாய பயிர் வெள்ளத்தால் நாசமானது. மழைக்கு இதுவரை 69பேர் பலியாகி உள்ளதாக மராட்டிய முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் கூறியுள்ளார்.
வெள்ள நிவாரணம் குறித்து மராட்டிய மந்திரி சபை இன்று ஆலோசனை நடத்துகிறது. வெள்ளம் பாதித்த அவுரங்கபாத் பகுதிகளை முதல்-மந்திரி நேற்று பார்வையிட்டார்.
பலத்த மழையால் குஜராத்தின் தெற்கு பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சூரத் நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கிருந்த 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஆந்திராவுக்கு புதிய புயல் ஆபத்து
வங்கக்கடலில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் ஆந்திராவில் வடக்குபகுதி மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஏரி, குளங்கள் உடைந்தன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் பலியானார்கள்.
இந்த நிலையில் கொல்கத்தா, வானிலை மைய அதிகாரி ஜே.வி.எம்.நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலநாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை யானது. புயலாக மாறி ஆந்திராவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆந்திராவையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதியதாக ஒரு காற்ற ழுத்த தாழ்வு நிலை உரு வாகியுள்ளது. அது புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு அந்த புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளை தாக்கும்.
கடந்த புயலை விட இந்த புதிய புயல் அதிக வேகத்தில் கரையை கடக்க வாய்ப்பிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...