வைத்தியர்கள் கடமையில் இல்லாமையால்நோயாளர்கள் அவதி…!!

Read Time:2 Minute, 57 Second

puliyankulkam-300x167-300x167வைத்தியர்கள் சிலர் கடமையில் இல்லாமையால் வவுனியா பிரதேச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வெள்ளிக்கிழமை கடமையில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயர்குருதி அமுக்கம் காரணமாக பாதிப்படைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு கடமையில் வைத்தியர் இல்லாத காரணத்தினால் நோயாளர் காவு வண்டி ஊடாக குறித்த நோயாளி வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.வவுனியா வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்களின் பொறுப்பற்ற செயற்பட்டால் குறித்த நோயாளியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காது ஆண்கள் தங்கி சிகிச்சை பெறும் 14 ஆம் விடுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு வைத்து ஊசி ஒன்று போடப்பட்டதாகவும் அதன் பின்னர் குறித்த நோயாளி நோயின் தீவிரத்தால் அவதிப்பட்ட நிலையில் அங்கு இருந்த இலத்திரனியல் இயந்திரம் ஒன்றும் வேலை செய்யவில்லை.இந்நிலையில் குறித்த நோயாளியான சமுர்த்தி உத்தியோகத்தர் மரணமடைத்தார்.

இவ்வாறு மரணமடைந்தவர் வவுனியா புளியங்குளம் வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தரான ஹபீல் முகம்மது இர்சாத் (வயது 38) ஆவார்.வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மையும் இந்த இறப்புக்கு காரணம் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்று நோயாளி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்திலிருந்து ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், நடுக்கடலில் வைத்து புலிகளினால் அபகரிப்பு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 84) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
Next post சட்டவிரோத மீன் பிடியில் ஈடுப்பட்ட 23 பேர் கைது…!!