பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு?

Read Time:2 Minute, 4 Second

201609040205511936_ISIS-linked-Group-Blamed-For-Bomb-Blast-In-Philippines_SECVPFபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான தவோ நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில், 14 பேர் உடல் சிதறி பலியாகினர், 67 பேர் படுகாயமடைந்தனர்.

அதிபர் ரோட்ரிகோவின் சொந்த நகரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு தான் நடத்தியிருக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.

விசாரணையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இயங்கிவரும் அபு சயீஃப் தீவிரவாத குழு இந்த நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய தலைமை காவல் அதிகாரி கூறுகையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு தேவையானவை வீட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு ; மக்கள் அச்சத்தில்..!!
Next post ஷீரடியில் இருந்து வந்த பஸ் மீது ராட்சத மரம் விழுந்தது: 26 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!