அமெரிக்காவில் இனவெறி: வங்காளதேச பெண் குத்திக்கொலை…!!

Read Time:2 Minute, 21 Second

201609031450074184_Bangladeshi-woman-stabbed-in-america_SECVPFவங்காளதேசத்தை சேர்ந்தவர் ‌ஷம்சுல் ஆலம்கான் (75). இவரது மனைவி நஜ்மா கானம்(60). ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு தங்களது இளைய மகனுடன் வங்காளதேசத்தில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் வந்து தங்கினர். அங்கு கடை வைத்து இருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் தான் இவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு 9.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு கணவர் ‌ஷம்சுல் ஆலம்கானுடன் நஷ்மா கானம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த நபர் நஜ்மா கானத்தை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டான். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் மசூதி அருகே வங்காளதேசத்தை சேர்ந்த இமாமும் அவரது உதவியாளரும் குத்திக்கொல்லப்பட்டனர்.

தற்போது வங்காளதேசத்தை சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இனவெறி தாக்குதலினால் தான் நஜ்மா கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். தங்களுக்கு நீதி வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடு செல்ல சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது…!!
Next post மாதவரம் பூங்காவில் கல்லூரி மாணவரின் ஆபாச செயலால் அலறியடித்து ஓடிய இளம்பெண்…!!