பாகிஸ்தானில் பலத்த மழை: பாலம் இடிந்து விழுந்து 40 பேர் பலி

Read Time:1 Minute, 33 Second

Pakistan-Palam.jpgபாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பலியாகி விட்டனர். வடமேற்கு மாகாணம்தான் இந்த மழையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மர்தான் நகரில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது.

இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாலத்தை தொட்டபடி சென்றது. இந்த பாலத்தின் மீது ஏராளமான பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர்.

அப்போது அந்த பாலம் திடீர் என்று இடிந்து விழுந்தது. பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளிலும் ஆற்று வெள்ளத்திலும் சிக்கினார்கள்.

இதில் 40 பேர் பலியாகி விட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இன்னும் சிலரை காணவில்லை. பலியானவர்கள் உடல்களையும், இடுபாடுகளில் சிக்கி தவித்தவர்களையும் மீட்க ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Pakistan-Palam.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவில் புயலுக்கு 73 பேர் பலி
Next post லெபனான் கை ஓங்குகிறது: ஏவுகணை வீச்சில் 15 இஸ்ரேல் வீரர்கள் பலி