ஒடிசாவில் ஆம்புலன்ஸ் பாதியில் இறக்கி விட்டதால் 6 கி.மீ தூரம் மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை…!!

Read Time:2 Minute, 2 Second

201609030225022407_Father-shoulder-carrying-daughters-body-at-6-km-distance_SECVPFமல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து கேமுது. இவருடைய மகள் பார்ஷா (வயது 7) உடல்நலக்குறைவால் மிதாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால், மல்காங்கிரி மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அதற்காக ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவரும், அவருடைய மனைவியும் மகளை கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே அச்சிறுமி இறந்து விட்டாள். அது தெரிந்தவுடன், ஆம்புலன்ஸ் டிரைவர், சிறுமியின் உடலுடன் கீழே இறங்குமாறு வற்புறுத்தினார்.

தினபந்துவும், அவருடைய மனைவியும் வேறு வழியின்றி மகளின் உடலை கீழே இறக்கினர். பின்னர், உடலை தோளில் சுமந்து கொண்டு தங்கள் கிராமத்தை நோக்கி சுமார் 6 கி.மீ தூரம் நடந்தனர். பல மைல் தூரம் நடந்த நிலையில், அக்காட்சியை கண்ட சிலர் வேறு வாகனத்தை வரவழைத்து உடலை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் குறித்து டிரைவர் உள்பட 3 பேர் மீது மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 12 பேர் பலி, 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!
Next post வேலைக்குச் செல்வதற்காக தனக்கென சொந்த விமானத்தை உருவாக்கிய நபர்…!!