குடும்பத்தகராறு… திருமண நாளில் ஹைகோர்ட் பெண் வக்கீல் தூக்குப் போட்டு தற்கொலை..!!

Read Time:4 Minute, 35 Second

suicide-1-600-02-1472803617குடும்பத் தகராறில் உயர்நீதிமன்ற பெண் வக்கீல் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரை சேர்ந்தவர் திருமலைசாமி ,58. இவரது மனைவி தங்கஒளிவு, 56. இவர்களுக்கு ஆனந்த சிவரஞ்சனி, 36 என்ற மகளும், ஆனந்தகுமார் ,32 என்ற மகனும் உள்ளனர். ஆனந்த சிவரஞ்சனிக்கும், சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பொன்ராஜ் தண்டையார்பேட்டையில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். தம்பதிக்கு தர்ஷினி என்ற 4வயது மகள் உள்ளார்.

ஆனந்த சிவரஞ்சனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக இருக்கிறார். இவர்களுடன் பொன்ராஜின் தாய் பாக்யலட்சுமி வசித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்ராஜுக்கும், ஆனந்த சிவரஞ்சனிக்கும் நேற்று திருமணநாள். இதற்காக நேற்று காலை கோயிலுக்கு போகலாம் என கணவர் பொன்ராஜை ஆனந்த சிவரஞ்சனி அழைத்துள்ளார். ஆனால் பொன்ராஜ் வர மறுத்துள்ளார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பொன்ராஜ் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமையன்று மாலை 5 மணிக்கு சென்னையில் வசிக்கும் ஆனந்த சிவரஞ்சனியின் தம்பி ஆனந்தகுமாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய பொன்ராஜ் தாய் பாக்யலட்சுமி மற்றும் அவரது சகோதரிகள் கலை, தமிழ் ஆகியோர், உங்க அக்கா தூக்கு போட்டு தற்கொலை செய்த கொண்டாள் என தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார், அலறியடித்து கொண்டு ஆனந்தசிவரஞ்சனியின் வீட்டுக்கு ஓடினார். அங்கு அவர் மின்விசிறியில் தூக்கில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து கதறி அழுத ஆனந்தகுமார், ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடும்ப பிரச்னை அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.

இதனிடையே ஆனந்த சிவரஞ்சனியின் தம்பி ஆனந்தகுமார் ஆர்.கே.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தனது அக்காவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் என்னுடய அக்கா தற்கொலைக்கு கணவர் பொன்ராஜ், மாமியார் பாக்யலட்சுமி மற்றும் பொன்ராஜின் சகோதரிகள் கலை, தமிழ் ஆகியோர்தான் காரணம் என புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினைக்காக உயர்நீதிமன்ற பெண் வக்கீல் தற்கொலை செய்த சம்பவம் வக்கீல்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீக்குளிக்க முயற்சித்த இன்ஸ்பெக்டர் காஞ்சனா.. தடகள போட்டிய்யில் 350 தங்கம் வென்றவர்…!!
Next post ஹற்றனில் பனி மூட்டம்! வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை…!!