கொழும்பு துறைமுக தீ பரவலுக்கு இதுவா காரணம்…!!

Read Time:2 Minute, 34 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)கொழும்பு துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட தீ பரவலுக்கு, பாவனைக்கு உதவாத இறப்பர் ஹோஸ் குழாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அண்மித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுதல் (வேல்டிங்) வேலைகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறை முகத்தின் கிழக்கு ‘டேர்மினல்’ பகுதியில் இன்று பிற்பகல் பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று பதிவானது.

குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பாவனைக்கு உதவாத இறப்பர் ஹோஸ் குழாய்கள் இருந்த இடத்திலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதி முழுவதும் கருப்பு நிற புகைமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் துறைமுக தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின்னரே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 10 தீயணைப்பு வண்டிகளை ஈடுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தீப்பரவலினால் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், சொத்து சேதங்கள் தொடர்பில் , இதுவரை கணக்கிடப்படவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயிலில் மோதி இளைஞர் பலி! திருகோணமலையில் சம்பவம்…!!
Next post கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்..!!