பிரேத அறைக்கு புதிய குளிரூட்டிப்பெட்டிகள்…!!

Read Time:2 Minute, 48 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் புதிய குளிரூட்டிப்பெட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து சட்டவைத்தியரின் அறிக்கைக்காக உற்படுத்துகின்ற ஓரிரு சடலங்கள் மாத்திரமே குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைப்பதாகவும் மற்றைய சடலங்கள் பிரேத அறையில் வெளியில் வைக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி புதிய 08 குளிரூட்டிப்பெட்டிகள் பொறுத்தப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

தூர இடங்களிலிருந்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக கொண்டு வரப்படுகின்ற சடலங்களையும், வௌி நாட்டவர்களுக்கு மரணங்கள் நிலவுகின்ற போது வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல தேவையில்லாத விதத்தில் பாதுகாத்து வைக்கக்கூடிய குளிரூட்டி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மருந்து களஞ்சியசாலைகளில் மருந்துகளை சரியான வெப்பநிலைக்கு வைத்துக்கொள்ளும் நோக்கில் வைத்தியசாலைகளில் அனைத்து களஞ்சியசாலைகளும் குளிரூட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பொது மக்களுக்கும் நோயாளர்களுக்கும் பிரச்சினைகள் ஏதாவது இருப்பின் தமதுஅலுவலகத்திற்கு வருகைத் தந்து தெரியப்படுத்த முடியமெனவும் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் குறிப்பிட்டார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுவதிகளின் நிர்வாணப்படங்களை வெளியிட்ட நபர்..!!
Next post அட்லாண்டிக் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்…!!