2.5 லட்சம் ஆணுறைகள்.. இருட்டிலும் அரங்கேறிய சாகசங்கள்: ஒலிம்பிக் கிராமத்தில் நடப்பது இது தான்…!!
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஸிகா வைரஸ், சுகாதாரச் சீர்குலைவு, பிக்பாக்கெட் தொந்தரவு என பல சர்ச்சைகளை தாண்டி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த தொடரில் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ஆணுறைகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே அதிகபட்ச ஆணுறை ஏற்பாடு ரியோவில் தான். ஒரு சராசரி கணக்குப் பார்த்தால், ஒரு வீரருக்கு 42 ஆணுறைகள்.
ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் போட்டிகள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒருபக்கம் களைகட்டினால், மறுபக்கம் பாலியல் லீலைகளும் படு ஜோராகத்தான் நடக்கின்றன.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் அவுஸ்திரேலியர்கள் ஸிகா வைரஸ் தாக்காத ஆணுறைகளை கொண்டு வந்தார்களாம்.
கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டி தான் ஆணுறை விடயத்தில் அசத்தியது. அங்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆணுறைகள் தயாராக இருக்க, வீரர், வீராங்கனைகள் அனைவரும் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
ஒலிம்பிக் கிராமத்தில் ‘மஜா’வுக்குக் குறையில்லை என்று சிலர் கண்ணடித்தாலும், வேறு சிலர், அதெல்லாம் அவ்வளவு எளிதில்லை என்கிறார்கள்.
அதுனா சும்மா இல்ல
ஒரு வீரர் கூறுகையில், “ஜோடியை வளைத்துக் கொள்வது எல்லாம் அவ்வளவு எளிதல்ல, ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் கண்டிப்பாக தங்கியாக வேண்டும். அது உசேன் போல்ட்டாக இருந்தாலும் சரி, மைக்கேல் பெல்ப்ஸாக இருந்தாலும் சரி” என்று கூறியுள்ளார்.
ஜாலியா இருக்கணும்
பார்சிலோனா ஒலிம்பிக்கில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனை சம்மர் சாண்டர்ஸ் கூறுகையில் “ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்துக்கு என்று ஒரு தாரக மந்திரம் இருக்கிறது. அதாவது, விளையாட்டு கிராமத்தில் நடப்பதை விளையாட்டு கிராமத்திலேயே மறந்துவிட வேண்டும் என்பதுதான் அது” என்கிறார்.
வாழ்வில் ஒரு முறை கிடைக்கும் அனுபவம்
அமெரிக்க கால்பந்து வீராங்கனை ஹோப் சோலோ கூறுகையில் “வாழ்வில் ஒரே ஒருமுறை கிடைக்கும் அனுபவம் என்கிற வகையில் எது நடந்தாலும் தப்பில்லை என்ற தெம்பில்தான் பலர் இருப்பார்கள். ஒரு புதிய அனுபவத்துடன் இங்கிருந்து புறப்பட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அது ஆடுகளமாகவோ, கொண்டாட்டமாகவோ அல்லது செக்ஸ் லீலைகளாகவோ இருக்கலாம்.
புல்வெளியில், கட்டிடங்களுக்கு இடையில் என்று திறந்தவெளியில் எல்லாம் உறவு வைத்துக்கொண்டவர்களை நான் கண்டிருக்கிறேன்” என்றார்.
நல்ல வேளை ஓடி வந்துட்டேன்
“ஒருமுறை நான் ஆணுறை எந்திரத்தை தேடிச் சென்று, அங்கே இன்னொருவர் நிற்பதைக் கண்டு திரும்பிவந்து விட்டேன்” என்று தனது அனுபவத்தைச் சொல்கிறார், நியூசிலாந்து குதிரையேற்ற வீரர் கிளார்க் ஜான்ஸ்டன்.
இவர்களைப் போன்றவர்களுக்காகத்தான், ஆணுறை பைகளோடு சிலரை உலா வர விட்டிருந்தார்களாம்.
ஆக ஒலிம்பிக் கிராமத்திற்கு செல்லும் வீரர், வீராங்கனைகள் பதக்கம், கொண்டாட்டம், புகழ் தவிர இருட்டிலும் பல சாகசங்களை நிகழ்த்தி விட்டு தான் வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating