ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விடயங்கள்..!!

Read Time:4 Minute, 22 Second

nails_002.w540மனிதனின் கை, கால் விரல்களின் நுனிப்பகுதியை மூடியிருப்பது தான் நகங்களாகும். இந்த நகங்களில் நமக்கு தெரியாமலேயே நிறைய விஷயங்கள் உள்ளன. பெரும்பாலானோர் தங்களது நகங்களை அதிகம் கண்டு கொள்ளமாட்டார்கள். குறிப்பாக ஆண்கள் நகங்களின் மீது அக்கறையே செலுத்தமாட்டார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் சரியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இப்போது நாம் இக்கட்டுரையில் கை, கால்களில் வளரும் நகங்களைப் பற்றி பலரும் அறியாத சில விஷயங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நகங்களின் வளர்ச்சி

கால்விரல் நகங்களை விட, கை விரல் நகங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும். அதிலும் ஒரு மாதத்தில் கைகளில் 3.5 மில்லிமீட்டர் நகமும், கால்களில் 1.6 மில்லிட்டர் நகமும் வளரும் என்றால் பாருங்கள்.

வெள்ளைப் புள்ளிகள்

கைவிரல் நகங்களில் வெள்ளை நிறப் புள்ளிகள் வருவது பொதுவான ஒன்று. பலரும் இந்த வெள்ளைப் புள்ளிகள் கால்சியம் குறைபாட்டினால் ஏற்படுவதாக நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. உண்மையில் அது நகத்தின் வேர் பகுதியில் முன்பு ஏற்பட்ட சிறு அடியினால் வருபவை.

பெண்களை விட ஆண்களுக்கே வேகமாக வளரும்

ஆம், ஆய்வுகளும் பெண்களின் நகங்களை விட ஆண்களின் நகங்கள் வேகமாக வளரும். அதனால் தான் பெண்களை விட, ஆண்களை அடிக்கடி நகம் வெட்ட சொல்கிறார்கள்.

நகங்களைக் கடிப்பது நகங்களைக் கடிப்பதால், சரும நோய்த்தொற்றுகள் ஏற்படும் மற்றும் இது நகங்களுக்கு அடியில் உள்ள சதையின் நிலைமைகளை மோசமாக்கும் என்பது தெரியுமா? ஆகவே, நகங்களைக் கடிக்கும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

நகங்கள் ஆரோக்கியத்தைக் குறிக்கும்

நகங்களின் நிறங்கள், உடல் ஆரோக்கியத்தைக் குறிக்கும். நகங்களின் நிறத்தைக் கொண்டு கூட உடலில் இருக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடியும். எனவே உங்கள் நகத்தின் நிறம் திடீரென்று மாறினால், உடனே கவனியுங்கள்.

மன அழுத்தம் நகங்களை பாதிக்கும்

நாள்பட்ட மன அழுத்தம், உடலின் ஆற்றலைப் பாதித்து, வளரும் நகங்கள் மற்றும் முடிகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறாமல் தடுத்து, அவற்றில் பாதிப்புக்களை உண்டாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே உங்கள் நகம் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் செயல்களில் ஈடுபடுங்கள்.

வெப்பநிலைக்கேற்ப வளர்ச்சி வேறுபடும்

நகங்களின் வளர்ச்சி வெப்பநிலைக்கேற்ப வேறுபடும். உதாரணமாக, கோடையில் நகங்கள் வேகமாகவும், குளிர்காலத்தில் மெதுவாகவும் வளரும். அதேப் போல் இரவை விட பகலில் நகங்கள் வேகமாக வளரும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அட்லாண்டிக் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்…!!
Next post உயர்பீடத்து ஜனநாயகம்…!!