நாம் உணவில் சேர்க்கும் சின்ன சின்ன விஷயங்களின் அற்புதங்கள்…!!

Read Time:3 Minute, 21 Second

masala_002.w540நம் அன்றாட வாழ்வில்​,​ சிறு சிறு விஷயங்களே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிய அளவில் நாம் உணவில் சேர்ப்பதால் பெரிய பலன்களைத் தரும் உணவுகள் பற்றிப் பார்போம்.

கறிவேப்பிலை: ​சர்க்கரை நோய்​ உள்ளவர்கள், சாப்பிட்டுவருவது நல்லது. இரும்புச்சத்துக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, முடி உதிர்தல் ஆகியவற்றைத் தீர்க்கும்.

கொத்தமல்லி: ​செரிமானத்தை அதிகரிக்கும்.​ கல்லீரலைச் சுத்தப்படுத்தும். இது, ஒரு டீடாக்ஸ் கீரை எனலாம்.​

இஞ்சி: பித்தக்குறைபாடு, சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. வயிற்று உபாதைகளைத் தீர்க்கும்.

பூண்டு: ​கெட்ட ​கொழுப்பைக் குறைக்கும். வா​யுத்​ தொல்லைகள்​ உருவாகாமல் தடுக்கும். அன்றாடம் அளவுடன் சாப்பிட்டுவர புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

மிளகு: ​ மிகச்சிறந்த டீடாக்ஸ் உணவு. விஷத்தை முறிக்கும். ​தேனுடன் மிளகுப் பொடியைச் சேர்த்துச் சாப்பிட்டால், சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.​

சோம்பு: வயிறு சம்பந்தப்பட்ட பிரச்​னைகளை நீக்கும். வாந்தியை நிறுத்தும்.​ வாய் துர்நாற்றத்தைப் போக்கும். ​மணமூட்டியாகச் செயல்படுவதுடன், செரிமான சக்தியையும் மேம்படுத்தும்.

சீரகம்: ​உள் உறுப்புகளைச் சீர்செய்​வதால் சீரகம் என்று பெயர் பெற்றது. வயிற்றுப் புண் மற்றும் தலைசுற்றலைச் சரிசெய்யும். ரத்தஅழுத்தத்தைச் சீராக்கும்.​ ரத்தத்தை சுத்திகரிக்கும்.​

மஞ்சள்: ​இதில் உள்ள குர்குமின், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நல்லது. சிலவகைப் புற்றுநோய்களைத் தீர்க்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. ​

வெந்தயம்: உடலின் வெப்பநிலையைச் சமன்செய்யும். கண் எரிச்சலைப் போக்கி, குளிர்ச்சியை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள்​ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியைச் சமாளிக்க, நீர் மோருடன் சிறிதளவு வெந்தயத்தைக் கலந்து குடிக்லாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ இணையத்தில் பரவல்! அதிர்ச்சி வீடியோ…!!
Next post உங்க கூந்தலுக்கு எதற்கு கண்டிஷனர்?…. கட்டாயம் உபயோகப்படுத்தனுமாம் பெண்களே…!!