கருணாஅம்மான் தரப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட வன்னிப்புலிகள் இவர்கள்..

Read Time:1 Minute, 55 Second

TMVP-Ltte..paniccankeni.jpg1.jpgவன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பணிச்சங்கேணியிலுள்ள வன்னிப்புலிகளின் பிரதான முகாம் மீது 04.08.06 அதிகாலை 4மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினால் அதிரடித்தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று அதிகாலை வன்னிப்புலிகளின் முகாமைச் சுற்றிவளைத்த தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் போராளிகள் அவர்களின் முன்னரங்கு காவல் நிலைகளை உடைத்துக் கொண்டு முன்னேறி வன்னிப்புலிகளின் முகாம் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டனர் எனவும் எதிர்பாராத இத்திடீர்த் தாக்குதலினால் வன்னிப்புலிகள் நிலைகுலைந்து போனார்கள் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இத்தாக்குதலில் வன்னிப்புலிகளின் தரப்பில் 11பேர் கொல்லப்பட்டதுடன் மூவர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆதிமைந்தன் (கந்தலிங்கம் சுதர்ஷன் வயது16), திருப்பரன் (வைரமுத்து ரவி வயது20), கலிவேந்தன் (மோகன் வயது20) சிறைப்பிடிக்கப்பட்டவர்களாவர். இத்தாக்குதலில் வன்னிப்புலிகளின் பணிச்சங்கேணி முகாம் முற்றாகத் தகர்க்கப்பட்டதுடன் அங்கிருந்த பெருமளவான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

TMVP-Ltte..paniccankeni.jpg1.jpg
Tmvp-LTTE..paniccankeni2.jpg

Thanks…WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திரிகோணமலையில் மீண்டும் குண்டு வீச்சு
Next post வன்னிப்புலிகளின் கட்டுவன்வில் முகாம் மீது கருணாஅம்மான் தரப்பினர் தாக்குதல்