பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக தொப்பை ஏற்பட என்ன காரணம்…!!
மகளிரை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருகிறது. தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் பீரும் ஒன்று.
ஆண்கள்தான் பீரை அதிகம் குடிப்பார்கள். ஆண்களே உங்கள் தொப்பையைக் குறைக்க பல வழிகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆண்களின் சில பழக்க வழக்கங்கள் தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. இப்போது ஆண்களுக்கு தொப்பை வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
பீர் குடித்தால் உடல் பருமன் வருகிறது. அதிகமான ஆண்களுக்கு பீர் விருப்பமான பானமாகும். மற்றும் என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதனை அடிக்கடி குடித்தால் தொப்பை தான் வரும். ஏனென்றால் இதில் கலோரிகள் அதிகம் இருக்கிறது.. நீங்கள் தொப்பையை குறைக்க வேண்டுமா? முதலில் ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள். ஆண்கள் நாற்காலியில் உட்கார்ந்தவாறே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள்.
இதனால் சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணம் ஆவதில்லை. இது கொழுப்புக்களாக மாறி உடலில் தங்கி உடல்பருமனை உருவாக்குகின்றன. ஆண்களுக்கு தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளக் கூட நேரம் கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு பணிச்சுமை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ரெஸ்ட் எடுக்கவே டைம் இல்லாதபோது, உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கும்?.
பணிச்சுமை அதிகமாக இருப்பதால் பல ஆண்கள் மனஅழுத்தத்தினால் துன்புறுகின்றனர். மன அழுத்தம் அதிகமானால் உடலில் ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகின்றது.
இதுவே உடல்பருமனுக்கு அதாவது தொப்பைக்கு வழி வகுக்கிறது. அடிக்கடி பெண்கள் மட்டும்தான் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
ஆண்கள் கூட இரகசியமாக நொறுக்குத் தீனியை சாப்பிடுகிறார்கள். இதனால் தான் ஆண்களுக்கு தொப்பை வருகிறது. ஆண்கள்தான் டி.வி. பார்க்கும் பொழுது எதையாவது வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பார்கள். அதுவும் குறிப்பாக விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் போதும் டி.வி. பார்த்துக் கொண்டே வடை, போண்டா, சிப்ஸ் என்று சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக ஆண்கள்தான் நண்பர்களுடன் பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்வார்கள்.
மேலும் பார்ட்டி என்றாலே அன்றைக்கு அதிகமாக குடிப்பதோடு மட்டுமில்லாமல், அசைவ உணவுகளை வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். இப்படி வாரம் ஒரு முறை பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating