மர்ம காய்ச்சலுக்கு 4 சிறுவர்கள் பலி: போலி டாக்டர்கள் 3 பேர் கைது..!!

Read Time:7 Minute, 33 Second

201608221244525120_fake-doctors-3-person-arrest-in-tiruvallur-district_SECVPFதிருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு அருகே காவேரிராஜபுரம் மற்றும் ஆதி ஆந்திரவாடா கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்கள் யுவராஜ் (வயது 6), சந்தோஷ் (6), மோகன் (9), மோகன்குமார் (6) ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இந்த 2 கிராமத்திலும் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். காய்ச்சலால் சிறுவர்கள் உயிர் இழந்ததையடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதித்த 11 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 2 சிறுவர்களும், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதித்த கிராமத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

காய்ச்சல் பாதித்த 2 கிராமங்களிலும் சுகாதாரத்துறை, கால்நடை துறை மூலம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 4 மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் குழுவினர் ஒவ்வொரு வீடு வீடாக சென்று நோய் பாதிப்பு குறித்து அறிந்து வருகின்றனர்.

இதுதவிர அக்கிராமங்களை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுக்கும் மருத்துவ குழுவினர் சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் நோய் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் பற்றிய விவரங்களையும் சுகாதாரத்துறை கணக்கெடுத்து களத்தில் இறங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள போலி டாக்டர்கள் பலர் தலைமறைவாகி விட்டனர். மருத்துவ படிப்பு படிக்காமல் 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள் அந்த பகுதியில் டாக்டர் போல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபோன்ற போலி டாக்டர்களின் நடமாட்டத்தாலும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரத்தில் சிகிச்சை அளித்த வந்த போலி டாக்டர் தெய்வ சிகாமணி (54), அந்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர்கள் 70 வயதான நந்தகோபால், சுப்பாராவ் (52) ஆகியோரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.

பொது மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் போலி டாக்டர்களை பிடிக்கவும் போலீசார் விரைந்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆழ்துளை கிணறு மூலமாகவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடன் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களுக்கு லாரி மற்றும் டிராக்டர்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் மற்றும் சுற்றுப்புற தூய்மையின்மையால் தான் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

நோய் பாதித்த 2 கிராமங்களிலும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமி பாதிப்பு உள்ளது. குடிநீர், ஏடீஸ் கொசுக்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மேல்நிலை தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. லாரி மற்றும் டிராக்டர்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.

அங்குள்ள குடிநீர் குழாய்கள் மாற்றம் செய்து புதிய குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும் வரை லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படும். 24 மணி நேரமும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் அக்கிராமங்கள் உள்ளன. மருத்துவ குழுக்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.

எனவே பொது மக்கள் பயப்பட தேவையில்லை. போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவம் படிக்காதவர்களிடம் சிகிச்சை பெற்றால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் தகுதியான மருத்துவர்களை நாடி சிகிச்சை பெற வேண்டும். போலி டாக்டர்களை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி மாணவன் சாதனை…!!
Next post டெல்லியில் இளம்பெண் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!!