மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இறந்து போன பயணியின் பையில் ரூ.99 லட்சம் பணம், தங்க கட்டிகள்…!!

Read Time:2 Minute, 27 Second

201608210637217885_Rs-99-lakh-gold-biscuits-found-from-dead-passengers-bag-in_SECVPFமும்பை சி.எஸ்.டி.- ஹவுரா கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சுபாஷ் சந்த் சுரானா (வயது 55) என்ற பயணி தனியாக பயணம் செய்தார். அவர் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம், ஹவுராவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அந்த ரெயில் நேற்று ஜார்கண்ட் மாநிலம், டாட்டா நகர் ரெயில் நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றதும், சுபாஷ் சந்த் சுரானா திடீரென பேச்சு மூச்சற்று சரிந்தார்.

அவரோடு பயணம் செய்த பிற பயணிகள், அடுத்து வந்த கரக்பூர் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

அவரது உடலையும், அவர் கொண்டு வந்த பைகளையும் ரெயில் பெட்டியில் இருந்து போலீசார் அகற்றினர். பின்னர் அவரது பையைத் திறந்து பார்த்தபோது அதில் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக ரூ.99 லட்சம் ரொக்கமும், 3 தங்க கட்டிகளும் இருப்பது தெரிய வந்தது.

அவரது திடீர் மரணம் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் மேற்கு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது. அவரிடம் அவ்வளவு பணமும், தங்க கட்டிகளும் எப்படி வந்தன என்பது குறித்து, குடும்பத்தாரிடம் விசாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாயமான விமானத்தின் பாகங்களா? மர்ம பொருள் கண்டுபிடிப்பு…!!
Next post புலமைப் பரிசில் பரீட்சை இன்று…!!