ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 அலகாக பதிவு…!!

Read Time:1 Minute, 41 Second

201608210351045101_Strong-6-0-magnitude-quake-hits-northern-Japan_SECVPFஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள கடலோரப் பகுதிகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 அலகாக பதிவு ஆகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மியாகோ நகரில் இருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவுமில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேபோல் மியாகோ பகுதியில் 7 மணி நேரத்திற்கு முன்பாக நேற்று 6 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பாக 5.3 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவின் அலெப்போ நகரில் தொடர் தாக்குதல்: 3 வாரத்தில் பொதுமக்கள் 300 பேர் பலி…!!
Next post துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி..!!