சிரியாவின் அலெப்போ நகரில் தொடர் தாக்குதல்: 3 வாரத்தில் பொதுமக்கள் 300 பேர் பலி…!!

Read Time:2 Minute, 21 Second

201608210322241001_Over-300-Civilians-Killed-In-3-Weeks-Of-Violence-In-Aleppo_SECVPFஉள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கு அதிபர் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன.

அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படை வான்வெளி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்ப்டடது.

இந்நிலையில், மிகுந்த பேரழிவிற்கு ஆளாகி உள்ள அலெப்போ நகரில் கடந்த 3 வாரங்களில் மட்டும் பொதுமக்கள் 300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்களில் 333 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

சிரிய அரசு தரப்பு படையினர் மேற்கு பகுதியில் நடத்திய தாக்குதலில் 49 குழந்தைகள் உட்பட 165 பேர் பலியானார்கள். ரஷ்யா தரப்பு படையினர் கிழக்கு பகுதியில் நடத்திய வான்வெளி தாக்குதலில் 168 பேர் கொல்லப்பட்டனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் திறப்பு…!!
Next post ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 அலகாக பதிவு…!!