காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை…!!

Read Time:2 Minute, 13 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சட்டக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

காணாமல் போன பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் காணாமல் போனோர் அலுவலகம் விசாரணை நடத்தும்.

எதிர்காலத்தில் ஓர் அங்கமாக மனித உரிமைகளை கருதி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த அலுவலகத்தின் அனைத்து பணிகளும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படும்.

இலங்கையில் வலுவான ஓர் சட்டக் கட்டமைப்பு காணப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படும் சட்டக் கட்டமைப்புகளுக்கு நிகரான சட்டங்கள் இலங்கையிலும் அறிமுகம் செயயப்படும்.

கடந்த காலங்களில் சட்டச் சிக்கல்கள் காணப்பட்டதனை ஏற்றுக்கொள்கின்றோம். இதன் காரணமாகவே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, உண்மை கசப்பானது என்ற போதிலும் உண்மையைக் கண்டறிய வேண்டியது அவசியமானதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களையும் காதல் வலையில் விழ வைக்கும் இந்த வீடியோ கண்டிப்பாக பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ
Next post வடமாகாணத்தின் சிறந்த பண்ணையாளர்களைக் கெளரவிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..!!