பிரசவத்தை எதிர்நோக்கி…!!

Read Time:3 Minute, 9 Second

pregnant-2பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்? என்பது.பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு, மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும் ஏற்படலாம்.

உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீ‌ட்டி‌ல் 2 கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் அவ‌சிய‌ம்…!!
Next post திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட பெருந்தொகை மாசுகள்..!!