நேபாளத்தில் மாதேசி போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய்: புதிய அரசு முடிவு…!!

Read Time:2 Minute, 36 Second

201608182036324938_Nepal-to-give-Rs-1-mn-to-those-killed-during-Madhesi_SECVPFநேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மாதேசி சமூகத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த ஆண்டு சுமார் 6 மாத காலம் நீடித்த இந்த போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது 52 பேர் பலியானார்கள். இவர்களில் 41 பேர் பொதுமக்களும், 11 பேர் பாதுகாப்பு போலீசார்களும் ஆவார்கள்.

சமீபத்தில் நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா தலைமையிலான புதிய அரசு உருவானது. இந்த அரசு மாதேசி போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் (நேபாளம் மதிப்பில்) நிதியுதவி வழங்க உள்ளது. காத்மாண்டுவில் இன்று நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்தது. கைது செய்யப்பட்டவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள்.

தேர்தலுக்கு முன் மாதேசி சமூகத்தினருடன் நேபாளி காங்கிரஸ்- சிபிஎன் மாவோயிஸ்ட் சென்டர் கூட்டணி செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி தலைமையில் 7 பேர் கொண்ட விசாரணை கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெஞ்சை உலுக்கும் அலெப்போ சிறுவனின் கோலம் – காணொளி..!!
Next post கும்மிடிப்பூண்டி அருகே 2 மாத குழந்தையை கொன்ற தந்தை கைது..!!