கலிபோர்னியாவை சூறையாடும் காட்டுத்தீ: 82 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்…!!

Read Time:2 Minute, 45 Second

201608171016290589_Southern-California-orders-82000-people-to-evacuate-over_SECVPFஅமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில் அதிகரித்துவரும் காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மத்திய கலிபோர்னியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் தென்பகுதியில் உள்ள மலையோர காட்டுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ, மெல்ல, மெல்ல பரவி 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அழித்து நாசப்படுத்தியுள்ளது. இதுதவிர சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலம் தீய்ந்தும், கருகியும் காணப்படுகிறது.

இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 700-க்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதும், காற்றின் போக்குக்கு ஏற்ப கட்டுக்கடங்காமல் படுவேகமாக பரவிவரும் இந்த தீயானது, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரைட்வுட் குடியிருப்பு பகுதியில் உள்ள பல வீடுகளை நாசப்படுத்தியது.

இதன்விளைவாக, அப்பகுதியில் வசித்துவந்த சுமார் 82 ஆயிரம்பேர் தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், வடக்கு கலிபோர்னியாவின் ஒருசில பகுதிகளிலும் காட்டுத்தீ படுவேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, மத்திய கலிபோர்னியா மாநிலத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எச்சரிக்கை விடுக்கும் திணைக்களம்.!!
Next post கும்மிடிப்பூண்டி அருகே 3-வது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை…!!