காணாமற்போனோர் பணியகம் படையினரைக் காப்பாற்றவா?

Read Time:30 Minute, 2 Second

article_1471147652-sdeபோர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காணாமற்போனோர் பணியகம் உருவாக்கப்படவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டிருக்கும் கருத்து, தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சராசரி சிங்கள அரசியல்வாதிகளின் வரிசையிலேயே அவரும் இந்த விவகாரத்தைக் கையாள முனைகிறாரா என்ற கேள்வியை இந்தக் கருத்து ஏற்படுத்தியிருக்கிறது.

அரசாங்கம் உருவாக்கத் திட்டமிட்டுள்ள காணாமற்போனோர் பணியகம், போரில் வெற்றியைப் பெற்றுத்தந்த படையினரைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சில வாரங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கை, காணாமற்போனோர் தொடர்பான பணியகத்தை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தைக் குழப்பும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

சிங்கள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, அவர்களின் மூலம் அரசதரப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, அந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுப்பதே மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியாக இருந்தது.

காணாமற்போனோருக்கான பணியகம் தொடர்பான சட்டமூலத்தை, தோற்கடிக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அறிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதில் கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது ஒன்றும் பழிவாங்குவதற்காக அமைக்கப்படும் பணியகமல்ல என்றும், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்படுகின்ற ஒன்றே என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனாலும் காணாமற்போனோருக்கான பணியகம் தொடர்பாக சிங்கள மக்களுக்கு விசனத்தையும் அவர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தும் கருத்துக்கள் தொடர்ந்தும் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் அமைச்சர் மனோ கணேசன், காணாமற்போனோருக்கான பணியகம் இராணுவத்துக்கு எதிரானதாகப் பயன்படுத்தப்படாது என்று கூறியிருக்கிறார்.

கூட்டு எதிரணியினர் கூறுவது போன்று, இது இராணுவத்தினரைப் பழிவாங்குவதற்காக அமைக்கப்பட்டவில்லை என்றும், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

காணாமற்போனோருக்கான பணியகம், காணாமற்போனோரின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்தல், காணாமற்போனோர் தொடர்பாக விசாரித்து, அவர்களின் நிலையைக் கண்டறிதல், காணாமற்போனமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்டே உருவாக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் சட்டத்தரணியான ரத்னவேல், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில், இந்தப் பணியகத்தினால் காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு பயனில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறாக, இந்தப் பணியகம் காணாமற்போனோரின் பிரச்சினைகளைத் தீர்க்குமா? ஆட்களைக் காணாமற்போகச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தான், அரசாங்கம் இதனை ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையாக எடுத்துக் காட்டத் தயங்குகிறது.

காணாமற்போகச் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நிலைக்கு இந்தப் பணியகம் பதில் கூறியாக வேண்டும். அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டரீதியான செயற்பாடுகளை எடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு விடயங்களையும் வெற்றிகரமாகச் செய்யக்கூடிய ஒரு கட்டமைப்பினால் தான், காணாமற்போனோரின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இந்த விவகாரத்துக்கும் முடிவு கட்ட முடியும்.இது அரசாங்கத்தில் இருக்கின்ற, மனோ கணேசன் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரிந்த விடயம் தான்.

காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறப்படாத எந்தப் பொறிமுறையும், எந்தப் பணியகமும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கப் போவதில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும், வெறுமனே தமது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்து கொள்வதற்காக மட்டும் போராட்டங்களை நடத்தவோ, வீதி வீதியாக அலையவோ இல்லை.

தமது உறவுகளுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தான், அவர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இப்போதைய அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் பொறுப்புக்கூறல் என்பதை, உண்மையை வெளிக்கொண்டு வருதல் என்று சுருக்கிவிடப் பார்க்கின்றனர்.

நடந்தது என்ன? என்பதைத் தெரிந்து கொள்வதால் மட்டும் நல்லிணக்கமோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலோ கிடைக்கப் போவதில்லை. ஆனால், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் உண்மையை வெளிக்கொண்டு வருதல் என்ற பெயரில், ஒரு பெரிய பொறுப்புக்கூறல் விவகாரத்தை, சாதாரண சின்ன விடயமாக மாற்றி விட முயற்சிக்கின்றனர்.உண்மையை வெளிக்கொண்டு வருதல் என்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதுபோலவே நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியமானது தான்.பொறுப்புக்கூறும் நீதித்துறை சார் நடவடிக்கைகளின் மூலம், பாதிக்கப்பட்ட உறவுகளின் மனோநிலையை ஓரளவுக்கு சமநிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

நீதி என்பது, சமூகத்தை வழிப்படுத்துவதற்கானது மாத்திரமல்ல, பாதிக்கப்பட்டவர்களை ஆசுவாசப்படுத்துவதற்குமானதும் தான்.

காணாமற்போனோர் விவகாரத்திலும் சரி, போர்க்குற்ற விவகாரங்களிலும் சரி, அரசாங்கம் கூறும் நீதி என்பது குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கானது அல்ல என்றே தெரிகிறது.

கூட்டு எதிரணியின் பிரசாரங்களுக்கு பயந்து அமைச்சர் மனோ கணேசன் போன்றவர்கள், இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக காணாமற்போனோருக்கான பணியகம் உருவாக்கப்படவில்லை என்று அறிக்கைகளை விடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களாலோ, சர்வதேச சமூகத்தினாலோ, ஏற்றுக் கொள்ளப்படாத மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு, காணாமற்போகச் செய்யப்பட்ட ஏராளமான சம்பவங்களுக்கு இராணுவத்தினரே காரணம் என்று சாட்சியங்கள் அளிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தது.

போர்க்காலத்தில் இடம்பெற்ற காணாமற்போதல்களுக்கு தனியே இராணுவம் மீது மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. விடுதலைப்புலிகள், துணை ஆயுதக்குழுக்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அப்படியிருக்கும் போது, இராணுவத்தினர் மீதும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாத விடயம். காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் போது, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் போது, தவறிழைத்த படையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணிச்சலாக கூறுவதற்கு அரசாங்கத்தில் யாரும் இல்லை.

போர்க்குற்றங்களை நிரூபிப்பதை விட, காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது இலகுவானதாக இருக்கலாம். ஏனென்றால், ஏராளமான காணாமற்போன சம்பவங்களுக்கு நேரில் கண்ட சாட்சிகள் இருக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு கொள்வதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஒன்றும் கடினமான காரியமாக இருக்காது.

காணாமற்போனோர் விவகாரத்துக்குத் தீர்வு காணும் ஒரு பொறிமுறையில் இது தவிர்க்கப்பட முடியாத ஒரு விடயமும் கூட. இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருக்கின்ற போது, அவர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் நடத்தப்படும், குற்றமிழைத்திருந்தால் மட்டும் தண்டனை விதிக்கப்படும் என்று கூறுவதற்கு அரசாங்கத்தில் யாரும் இல்லை.

எல்லோருமே, இராணுவத்தைக் காப்பாற்றுவதில் தான் குறியாக இருக்கின்றனர். இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றுவதில் ஒன்றாக நிற்கின்றனர். மனோ கணேசனும் கூட அதில் விதிவிலக்கானவராகத் தெரியவில்லை.

காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கு நீதியை வழங்கும் போது, படையினருக்கு எதிரானதாகவும் இருக்கலாம் என்ற உண்மையைச் சிங்கள மக்களுக்குச் சொல்வதற்கு அரசாங்கத்தில் உள்ள எந்த அரசியல்வாதிக்கும் துணிச்சல் இல்லை.

அவ்வாறு உண்மையைச் சொன்னால் சிங்கள மக்களின் எதிர்ப்பை தேடிக் கொள்ள நேரிடுமோ, அவர்கள் தமது ஆட்சியைத் தூக்கியெறிந்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்குள் இருக்கிறது. அது நியாயமான ஒன்று தான்.

காணாமற்போனோர் விவகாரத்தில் தனியே உண்மையைக் கண்டறிதல் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அரசாங்கம், காணாமற்போனோர் பணியகம் எதற்கு என்ற உண்மையை மட்டும் எடுத்துக் கூறுவதற்குத் தயாராக இல்லை. உண்மையை வெளிக்கொண்டு வருதல் மாத்திரம் முக்கியமல்ல, உண்மையை வெளிப்படையுடன் கூறுவதும் பொறுப்புக்கூறலில் முக்கியம்.

வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாத எந்தப் பொறுப்புக்கூறலுமே, தனது இலக்கை எட்டி விட முடியாது. காணாமற்போனோருக்கான பணியகம், இந்தப் பிரச்சிரனைக்கு முழுமையான தீர்வை வழங்கும் ஒன்றாக இருக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தவிர்க்க முடியாதது. அதனை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் சிங்கள மக்களுக்குக் கூறும் துணிச்சலையேனும் கொண்டிருக்காது போனால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதாக இருக்காது.

நீதியை வழங்குதல் என்பது, குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவதுடன் மட்டும் தொடர்புடையதல்ல. சமூகத்தில் இனிமேலும் அதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களை ஆசுவாசப்படுத்துவதற்கும் அது தேவையானது.

இந்த இலக்குகளை அடையத் தவறுகின்ற எந்த பொறுப்புக்கூறும் பொறிமுறையும், உண்மையான இலக்கை அடையாது. இந்த உண்மையை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்துவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பதுவும் முக்கியமானது.

அதனைச் செய்யத் தவறும் அரசாங்கத்தினால், இரண்டு தரப்புகளையுமே திருப்திப்படுத்திக் கொள்ள முடியாது.

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காணாமற்போனோர் பணியகம் உருவாக்கப்படவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டிருக்கும் கருத்து, தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது இருசக்கர வாகனம் வைத்திருப்போர் கண்டிப்பாக காண வேண்டிய காட்சி..!! வீடியோ
Next post வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!