காதலியை ஆட்டோவில் அழைத்துச் சென்று இரு நண்பர்களுக்கு பங்கு போட்ட காதலன்; அநுராதபுரம் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிஸாரால் கைது..!!
அநுராதபுரம் விலச்சிய பிரதேசத்தில் 16 வயதான காதலியை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அதன் பின் அவரை வீதியில் விட்டு சென்றமை தொடர்பில் குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விலச்சிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் விஹாரபாலுகம பிரதேசத்தை சேர்ந்த பிரதான சந்தேக நபரான குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன் முச்சக்கரவண்டியொன்றில் கடந்த 9 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தனது காதலியான புருதகஸ்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சிறுமியை சந்திக்க சென்றுள்ளார்.
அதன்போது, தனது பெற்றோர் நித்திரையில் இருந்த வேளையில் இச்சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு முன்பாகவுள்ள வீதிக்கு வந்து தனது காதலனை சந்தித்துள்ளார்.
அங்கு நின்று நாம் பேசிக்கொண்டிருப்பதனை எவராவது அவதானித்து விடுவார்கள் என சிறுமியிடம் கூறிய அந்த இளைஞன் அவரை நயவஞ்சகமாக முச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு விலச்சிய வாவி பக்கமாக சென்றுள்ளார்.
விலச்சிய பிரதேசத்திலுள்ள பாழடைந்த இடத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவரின் காதலன், அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் பின்னர் முச்சக்கரவண்டியில் அவருடன் வந்த மற்றைய இரு இளைஞர்களும் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் அச்சிறுமியை, அதிகாலை வேளையில் ஒயாமடுவ பிரதேசத்தில் விட்டுவிட்டு சந்தேக நபர்கள் மூவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் வீடு திரும்பிய சிறுமி தனது பெற்றோரிடம் இது தொடர்பில் தெரிவித்ததனையடுத்து விலச்சிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் அநுராதபுரம், விஹாரபாலுகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்திருந்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating