எதிர்காலத்தில் இப்படித்தான் உணவு கிடைக்குமாம்! உணவு அச்சிடும் 3D இயந்திரம்..!! வீடியோ

Read Time:2 Minute, 7 Second

3d_food_002.w540கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முப்பரிமான அச்சு இயந்திரங்கள் (3D Printers) பிரபலமாகத்தொடங்கின. இன்னும் அது முழுமையான பொதுப்பாவணைக்கு வரமுன்னரே இப்போது அதன் அடுத்த கட்டமாக புதிய ஒரு தொழில் நுட்பம் முன்னோட்டமுறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முப்பரிமான உணவு அச்சீட்டு இயந்திரமாக அறிமுகமாகியிருக்கும் இவ் இயந்திரம் உணவுகளை தயாரிப்பதற்கு உதவவுள்ளது. அதாவது, பிரபல ஆங்கில திரைப்படங்கள் சிலவற்றில் எதிர்வு கூறப்பட்ட எதிர்கால உணவு தயாரிப்பு முறைகளுக்கு ஒரு முதல் படி இயந்திரமாக இது உருவாகியுள்ளது.

சாதாரண உணவுகள் அனைத்தையும் இதில் தயாரிக்க முடியாவிட்டாலும் ஆரம்ப கட்டத்தில் சில வகை பழங்களின் சுவையை உடைய உணவுகளை இவ் இயந்திரம் அச்சிடவல்லது!. அதாவது, chocolate, vanilla, mint (புதினா) போன்ற வகை சுவைகளையுடைய பதார்த்தங்களை இது அச்சிடக்கூடியது.

இதன் தயாரிப்பாளர்கள், எதிர் காலத்தில் இவ்வகை இயந்திரங்களால் ஒரு hamburger(ஹம்பேர்கர்) ஐ கூட உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Foodini என அழைக்கப்படும் இவ் இயந்திரம் பற்றிய மேலதிக விபரங்களை பார்க்கலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்ப்பாலால் தாய்க்கு நன்மை…!!
Next post போக்கிமோனால் கறபழிக்கப்பட்டதாக போலீசில் ரஷ்யப் பெண் பரபரப்பு புகார்…!!