அதிசய தம்பதிகள்… மனைவி இறந்த 20 நிமிடத்தில் கணவரும் மரணம் – கடிகாரமும் நின்றது..!!
அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி இறந்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த அறையில் இருந்த கடிகாரமும் காதல் தம்பதியினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நின்று போனதுதான் ஆச்சரியம்.வெளிநாடுகளில் எல்லாம் திருமண பந்தத்திற்கு மதிப்பு இருக்காது என்றும் ஆடையை மாற்றுவது போல கணவனையோ மனைவியையோ மாற்றுவார்கள் என்று கூறுவதுண்டு.
அது பொய் என்று நிரூபித்துள்ளது அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.உடல்நலக்குறைவால் மனைவி இறந்த அடுத்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி மற்றும் ஜேனட் தம்பதிகளுக்கு திருமணமாகி 63 வருடங்கள் ஆகின்றன.கடந்த சில வருடங்களாக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜேனட், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.தனது மனைவியை தினந்தோறும் மருத்துவமனையில் சென்று பார்ப்பதை 86 வயதான ஹென்றி வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹென்றி, தனது மனைவி இருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 31ம் திகதி;தம்பதிகள் இருவருக்கும் உடல்நிலை மோசமடைந்தது.மனைவிக்கு இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்தாத் கணவர் ஹென்றி. நினைத்தது போலவே சிகிச்சை பலனளிக்காமல் அன்று அதிகாலை 5.10 மணியளவில் ஜேனட் மரணமடைந்தார். அவரை தொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து ஹென்றியும் உயிரும் பிரிந்தது.
இருவரும் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த கடிகாரம் ஹென்றி இறந்த நேரமான 5.30 மணிக்கு மேல் ஓடாமல் அப்படியே நின்றுவிட்டதாக அவருடைய மகன் தெரிவித்தார்.63 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இணைபிரியாத கணவன்,மனைவியாக இருந்த ஹென்றி-ஜேனட் தம்பதியினர் மரணத்திலும் இணைபிரியாமல் ஒன்றாக சேர்ந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating