மூதூர் நகரில் சண்டை நீடிக்கிறது இதுவரை 161 பேர் பலி

Read Time:3 Minute, 27 Second

artillery.jpgஇலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது. இதில் இதுவரை 161 பேர் இறந்து இருக்கிறார்கள். மூதூர் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

அணைக்கட்டு தண்ணீர்

இலங்கையில் திரிகோண மலை பகுதியில் உள்ள மூதூரில் இருக்கும் மாவிலாறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்லும் மதகுகளை விடுதலைப்புலிகள் மூடிவிட்டனர். இதனால் பொதுமக்களுக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

அணையை கைப்பற்றி மதகுகளை திறக்க ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் கடந்த ஒரு வாரமாக அங்கு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை 161 பேர் இறந்து இருக்கிறார்கள்.

மக்கள் வெளியேற்றம்

ராணுவத்துக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையே, அணையை யொட்டி இருக்கும் மூதூர் நகர் பகுதியில் கடும் சண்டை நடக்கிறது. இரு தரப்பினரும் பீரங்கியாலும், துப்பாக்கியாலும் சுட்டுக்கொள்கிறார்கள். நேற்றைய போரில் 5 பேர்இறந்தனர். இதில் 3 பேர் பொதுமக்கள் ஆவர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.

இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக ,விமானப்படையினர் குண்டுவீசி , விடுதலைப்புலிகளின் முகாம்களை தாக்கி வருகிறார்கள் இதனால் மூதூர் நகரில் உள்ள 60 ஆயிரம் முஸ்லிம்களில் 30 ஆயிரம் பேர், தங்கள் குடும்பத்துடன் வெளியேறி வருகிறார்கள். அவர்கள் கந்தலை என்ற ஊரில் அடைக்கலம் புகுந்து இருக்கிறார்கள். நகரை விட்டுவெளியேறும் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினர் உதவி செய்து வருகிறார்கள்.

நார்வே துÖதுக்குழு

இலங்கையில் சமரச முயற்சியில் ஈடுபட்டு வரும் நார்வே நாட்டு தூதுக்குழு பிரதிநிதி ஜாண் ஹன்சென் பாருர், இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேயுடன்தற்போதைய நிலை பற்றி பேச்சு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,” நான் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப்புலிகளுடனும் பேச்சு நடத்துவேன்” என்றார்.

மேலும் ஐக்கிய நாட்டு சபை செயலாளர் கோபி அனன் ”இரு தரப்பினரும் சண்டையை நிறுத்திவிட்டு, பேச்சு வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தகவல் அனுப்பி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்ய ரூ. 75 கோடி நிதியும் அனுப்பி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வன்னிப்புலிகளின் முகாம் கருணாஅம்மான் தரப்பினரால் தாக்கியழிப்பு! 11பேர் பலி! மூவர் கைது!!
Next post டெஸ்ட் போட்டியில் 650 விக்கெட் கைப்பற்றி முரளீதரன் சாதனை