உங்கள் வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் என்ன?

Read Time:2 Minute, 54 Second

dry_mouth_001.w245சிலருக்கு வாய் அதிகமாக வறட்சியடையும். பொதுவாக வாய் வறட்சி அடைவதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு வாய் அதிகம் வறட்சியடைவதற்கு அவர்களது உடலில் இருக்கும் வேறுசில பிரச்சனைகளும் காரணம் என்பது தெரியுமா?

எனவே நீங்கள் அதிகமாக வாய் வறட்சியை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். அதற்கு முன் எதனால் எல்லாம் வாய் அதிகம் வறட்சியடைகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்

மருந்துகள்

சளி இருமலுக்கு எடுக்கும் ஆன்டி-ஹிஸ்டமைன் மருந்து மாத்திரைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், வயிற்றுப் போக்கு, பர்கின்சன் நோய் போன்றவைகளுக்கு எடுக்கும் மருந்துகளாலும் வாய் அதிகம் வறட்சியடைக்கூடும்.

புகையிலை மற்றும் மது

புகையிலை மற்றும் மது போன்றவற்றை அதிகம் உபயோகித்தால், உமிழ்நீர் சுரப்பிகள் வறட்சியடைந்து, வாயை எப்போதும் வறட்சியுடனேயே வைத்துக் கொள்ளும்.

சைனஸ் பிரச்சனை

சைனஸ் பிரச்சனை இருப்பவர்களால் நிம்மதியாக மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாது. அவ்வப்போது வாயின் வழியாகவும் சுவாசிப்பதால், அதன் காரணமாக வாய் அதிகம் வறட்சியடையும்.

புற்றுநோய் சிகிச்சைகள்

புற்றுநோய் சிகிச்சைகளான கதிரியக்கம் மற்றும் ஹீமோதெரபி போன்றவற்றை மேற்கொண்டால், அதன் காரணமாகவும் வாய் வறட்சியால் அவஸ்தைப்படக்கூடும்.

இதர பிரச்சனைகள்

வாய் வறட்சி என்பது ஒரு நோய் இல்லாவிட்டாலும், அது உடலில் இருக்கும் ஒரு பிரச்சனையின் அறிகுறி என்பதை மறவாதீர்கள். அதுவும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்றவற்றின் அறிகுறிகளுள் ஒன்று என்பதை மறக்க வேண்டாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1875 என்.சி. டின்களுடன் ஒருவர் கைது…!!
Next post வெள்ளாட்டுப் பால் மரத்தின் மருத்துவ குணங்கள்…!!