நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்…!!

Read Time:2 Minute, 1 Second

625.256.560.350.160.300.053.800.461.160.90வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

செங்குந்தா பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

நல்லூரிலுள்ள செங்குந்தா மரபினர் வருடா வருடம் இக்கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றனர். இதன்படி செங்குந்தா மரபினர் இல்லத்திலிருந்து கொடிச்சீலை யாழ். சட்டநாதர் சிவன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

அங்கிருந்து திருவூர்தி மூலம் காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது. அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று, சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று ஆலயத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டது.

இதேவேளை, நாளை காலை ஒன்பது மணிக்கு இடம்பெறும் கொடியேற்றத்துடன், நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?
Next post 2000 ரூபாவிற்கு மனைவியை விற்பனை செய்த கணவர்…!!