பட்டுச்சேலை நெசவில் ஆர்எம்.கே.வி.யின் புதிய சாதனை…

Read Time:3 Minute, 45 Second

sarees.jpgஒரே பட்டுச்சேலையின் இருபக்கங்களிலும் வேறுவேறு நிறங்கள், 4 பார்டர்கள் மற்றும் 4 முந்தானைகளுடன் நெசவு செய்து தமிழ்நாடு ஆர்எம்.கே.வி. நிறுவனம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரேசேலையை 4 வேறு வேறு சேலையைப்போல 2 நிறங்களில் 4 டிசைன்களில் அணியமுடியும்.

ஒரு பெண் எத்தனை ஒப்பனை செய்தாலும் பட்டுச்சேலையை தவிர எந்த சேலையை அணிந்தபோதிலும் முழுமையான அழகை அந்தபெண்ணிடம் காணமுடியாது. பட்டுச்சேலை உடுத்தால் தான் அந்த பெண் அழகாகவும், புதுப்பொலிவுடனும் தோன்றுவாள். பட்டுச்சேலையை உயிர் போல நேசிப்பவர்கள் தமிழ்ப்பெண்கள்.

திருமணம் போன்ற சுபகாரியங்களில் முதலில் நிற்பது பட்டுச்சேலைதான். அத்தகைய பெருமைமிகு பட்டுச்சேலை உற்பத்தியில் புதிய சாதனையை நிகழ்த்தி வருபவர்கள் ஆர்எம்.கே.வி. நிறுவனத்தினர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீளமான பட்டுச்சேலையை நெசவு செய்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றனர். அடுத்தபடியாக ஒரே பட்டுச்சேலையில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறங்களை இடம் பெறச்செய்தனர். அதுவும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

இப்போது 3-வதாக பட்டுச்சேலையின் இரு பக்கங்களிலும் வேறு வேறு நிறங்கள், 4 பார்டர்கள், 4 முந்தானைகளுடன் நெசவு செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

புதுவித பட்டுச்சேலை

அந்த பட்டுச்சேலையின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது. வெவ்வேறு நிறங்களில் பட்டுச்சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உதாரணமாக ஒரு பட்டுச்சேலையின் ஒரு பக்கத்தில் சிவப்பு நிறமும், மறுபக்கத்தில் ஊதா நிறமும் உள்ளது. சிவப்பு நிறம் விரும்பும் போது சிவப்பு நிறப்பக்கத்தை முன்பக்கமாக வைத்து உடுத்தினால் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கலாம். பக்கத்தை மாற்றி அணிந்தால் ஊதாநிறத்தில் தோன்றலாம்.

அதுமட்டும் அல்ல, சேலையின் 2 பக்கத்திலும் முந்தானைகள் உள்ளன. ஒவ்வொரு முந்தானையிலும் 2 நிறங்கள், 2 டிசைன்கள் உள்ளன. அதாவது 2 முந்தானைகளிலும் 4 டிசைன்கள் இருக்கின்றன.

இந்த ஒருசேலை எடுத்தால், 4 பட்டுச்சேலை எடுத்தது போல 4 விதங்களில் அணியலாம். இந்தபட்டுச்சேலையின் விலை ரூ.68 ஆயிரத்து 650.

இந்த பட்டுச்சேலையை உருவாக்கியதற்காக ஆர்எம்.கே.வி. நிறுவனத்தை மத்திய பட்டுவாரிய இயக்குனர் சோமசேகர் பாராட்டி பேசினார். இந்த படைப்பு கின்னசில் இடம்பெறுகிறது என்று ஆர்எம்.கே.வி. நிர்வாக இயக்குனர் சிவகுமார் தெரிவித்தார்.
sarees.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரம்ஸ்பெல்டு பதவி விலக ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை
Next post வன்னிப்புலிகளின் முகாம் கருணாஅம்மான் தரப்பினரால் தாக்கியழிப்பு! 11பேர் பலி! மூவர் கைது!!