உத்தரகாண்டில் நிலச்சரிவு: ஒருவர் பலி -சர்தாம் யாத்திரை தொடர்ந்து பாதிப்பு…!!

Read Time:2 Minute, 39 Second

201608062021407189_One-killed-in-landslide-in-U-khand_SECVPFஉத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பங்கபாணி பகுதியில் நேற்று மாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சரிந்து விழுந்த கற்பாறைகள் மோதியதில் டான் சிங் என்பவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலச்சரிவால் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்களுக்கு செல்லும் சர்தாம் புனிதயாத்திரையும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயங்களுக்கு செல்லக்கூடிய ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜோஷிமத்-மலரி எல்லை சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் புனித யாத்திரை பயணங்கள் தடை செய்யப்பட்டன.

386 யாத்ரீகர்கள் பத்ரிநாத்திலும் 258 யாத்ரீகர்கள் சாஹிப்பிலும் உள்ளனர். அவர்கள் திரும்பி வருவதற்கு போக்குவரத்து இன்னும் சரி செய்யப்படவில்லை.

ரிஷிகேஷ்-கேதார்நாத் நெடுஞ்சாலையில் முன்கட்டியா, டோலியா மந்திர் மற்றும் கரிகுந்த் ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், கோயிலுக்கு செல்லும் மலையேற்ற பாதை ஒரு திறந்து உள்ளது. இன்று காலை 32 யாத்ரீகர்கள் கவுரிகுந்த், பீம்பளி, லிஞ்சாவ்லி ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் யாத்திரையை தொடர்ந்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரம்: பொதுமக்கள் சாலை மறியல்..!!
Next post ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!!