ஆப்கானிஸ்தான் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஹெலிகாப்டர்: தீவிரவாதிகளிடம் சிக்கியதாக தகவல்…!!

Read Time:2 Minute, 39 Second

201608051259225818_Pakistani-helicopter-crash-lands-in-Afghan-Extremist_SECVPFபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து உஸ்பெகிஸ்தானுக்கு ஒரு அரசு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அதில் 7 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 6 பேர் பாகிஸ்தானியர்கள். ஒருவர் ரஷியாவை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த விமானியும் இருந்தார்.

அந்த ஹெலிகாப்டர் ஆப்கானிஸ்தான் எல்லையில் லோகார் மாகாணத்தில் பறந்த போது திடீரென மாயமானது. எனவே அது விழுந்து நொறுங்கியிருக்கலாம் என கருதப்பட்டது.

இப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. எனவே ஹெலிகாப்டர் தரை இறங்கிய விவரம் தெரியவில்லை. மேலும், அதில் பயணம் செய்தவர்கள் கதி என்ன என்றும் புரியவில்லை.

இதற்கிடையே தொழில் நுட்ப கோளாறினால் ஹெலிகாப்டர் அங்கு தரை இறங்கி இருப்பதாகவும், அதை தலிபான் தீவிரவாதிகள் தங்கள் வசம் வைத்திருப்பதாகவும், பயணிகளை பிணைக் கைதிகளாக சிறை பிடித்து இருப்பதாகவும் லோகார் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் சமீம் சலே தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் கூறினார்.

எனவே அந்த ஹெலிகாப்டரை மீட்க அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜான் நிகோல்சனுடன் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ரகீம் ‌ஷரீப் ஆலோசனை நடத்தினார். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை மீட்க சர்வதேச ராணுவத்தின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் நாட்டு வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய ஒயின் வெள்ளம்…!!
Next post மியான்மரில் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலி…!!