மர்மக்கிணறு: வெளிச்சத்துக்கு வந்தது…!!
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழியை தொடர்ந்து இதன் அருகாமையிலுள்ள மூடப்பட்ட கிணறு ஒன்றிலும் மனித புதை குழி காணப்படும் சந்தேகம் இருப்பதாக காணாமல் போனவர்களின் உறவுகள் தங்கள் சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் நீதிமன்றில் வைத்த கோரிக்கையினைத்தொடர்ந்து அதன் அகழ்வுப்பணி முற்றுப்பெற்றுள்ளது.
நாட்டில் யுத்த சூழ்நிலை மாறி அமைதி நிலை உருவாக்கப்பட்டபின் காணாமல் போனவர்கள், பாதுகாப்பு படையினரால் விசாரனைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு இதுவரைக்கும் தங்கள் வீடு வந்து சேராதவர்கள் பற்றி இவர்களின் உறவுகள் தேடுவதில் ஈடுபட்டு வருகின்ற வேளையில் கடந்த 23.12.2013 அன்று மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியூடாக மாந்தைப்பகுதி மக்களுக்கு நீர் வழங்கல் வடிகால் சபை குடிநீர் விநியோகத்திற்காக குழாய்கள் நிலத்தடியில் பதித்துச் சென்ற சமயம் புதைகுழி ஒன்று கண்டபிடிக்கப்பட்டது. அப் புதைகுழி 23.12.2013 தொடக்கம் 05.03.2014 வரை 33 தடவைகள் அகழ்வு செய்யப்பட்டது.
இந்த புதைகுழியானது அன்றைய மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய நிபுணர் டீ.எல்.வைத்தியரத்தின தலைமையில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கே.யோசப் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தேவத்த, மன்னார் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பெரமுன்ன, குற்ற விசாரணை பொறுப்பதிகாரி சமன்குமார, பிரதான பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசேகர, தொல்பொருள் ஆய்வு பணிப்பாளர் என்.கொடிதுவக்கு, தொல்பொருள் அகழ்வு உத்தியோகத்தர் விஐயரட்ன உட்பட முக்கியஸ்தர் சமூகமளித்திருந்த நிலையில் இவ் அகழ்வுப்பணி இடம்பெற்றது.
இவ் அகழ்வுப்பணியின்போது இவ் புதைகுழியிலிருந்து 84 மனித மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இது சம்பந்தமான வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இவ் வழக்கில் காணாமல் போனவர்களின் சார்பாக சட்டத்தரனிகள் ஆஐராகி தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்ற வேளையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணிகள் மன்றில் அறிக்கை ஒன்றை சமர்பிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு அருகாமையில் ஒரு கிணறு இருப்பதாகவும் அதற்குள்ளும் காணாமல் போனவர்களின் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டு அவ் கிணற்றை அடையாளப்படுத்தி அகழ்வு செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கமைவாக கடந்த 26.08.2015 அன்று மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜ முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான கிணறு அடையாளம் காணப்பட்டு இவ் கிணறு அகழ்வு செய்யும்வரை அவ்வீதிப்போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்ட நிலையில் பொலிஸ் பாதுகாப்பும் இடப்பட்டிருந்தது.
பின் இவ் கிணறு 19.02.2016 அன்று அகழ்வு செய்வதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தபோதும் அச்சமயம் மன்னாரில் பெய்திருந்த மழை காரணமாக அப்பகுதியில் வெள்ள நீர் காணப்பட்டதால் அக்காலக்கட்டத்தில் இவ் அகழ்வுப்பணியை மேற்கொள்ள முடியாது என மன்னார் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்
இதன் காரணமாக அன்றைய தினம் அகழ்வு செய்யவிருந்த இவ் சந்தேகத்திற்கிடமான கிணறு அகழ்வு செய்யப்படாத நிலையில் பின்தள்ளப்பட்டது.
பின் கடந்த ஏப்ரல் மாதம் 04,05,06 ஆம் திகதிகளில் மர்ம கிணறு அகழ்வு செய்யப்படும் என மன்னார் நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து 04.06.2016 அன்று இவ் வழக்கு மன்னார் நீதிமன்றில் அழைக்கப்பட்டு அன்றைய தினம் இவ் கிணற்றை அகழ்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating