முதலுதவி-மயக்கமடைந்து விட்டால்…!!

Read Time:6 Minute, 59 Second

????????????????????????????????????
????????????????????????????????????
பின்பக்கமாக நின்றுகொண்டு வயிற்றை அழுத்தும் முறை

அவரை முன்பக்கமாகச் சாயுங்கள்.
கையை மடக்கி அவரது மார்புக் கூட்டுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கவும்.

கைகளை மடக்கி மார்புக் கூட்டுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கும் முறை

மற்றொரு கையால் உங்கள் கையைப் பற்றி உள்புறமாகவும் வெளிப்புறமாகவும் அழுத்தம் கொடுக்கவும்.
ஐந்து முறை இப்படிச் செய்யவும்.
அப்படியும் சுவாசத் தடை நீங்கவில்லை என்றால், பின்புறமாக ஐந்து முறை தட்டுவதையும் ஐந்து முறை அடி வயிற்றை அழுத்துவதையும்

தொடரவும்.

மயக்கமடைந்து விட்டால்
அவரை கவனமாகக் கீழே படுக்க வைக்கவும்.
உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்கவும்.
சிறிசிஸி-ஐ உடனடியாகத் தொடங்குங்கள். தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள் மூலம் இதைச் செய்வது நல்லது.

வெளிப்புறப் பொருள்களால் ஏற்படும் சிறிய அளவிலான சுவாசத் தடை
சிக்கியிருக்கும் வெளிப்புற பொருள்களை வெளியில் கொண்டு வர இருமல் உதவி செய்யும். அடி வயிற்றை அழுத்துதல், மார்பை அழுத்துதல்,

பின்பக்கம் தட்டிக் கொடுத்தல் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் ஆபத்துதான். மிதமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து

கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். கவனிக்கத் தவறினால், நிலைமை சிக்கலாகி விடும்.

வெளிப்புறப் பொருள்களில் ஏற்படும் பெரிய அளவிலான சுவாசத் தடை

சுவாசத் தடை பற்றி இதுவரை கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் முழுமையானவை அல்ல. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப்

பின்பக்கம் தட்டுவதும், அடிவயிற்றை அழுத்துவதும், மார்பை அழுத்துவதும் நல்ல பயனை அளிக்கும். இதில் ஏதேனும் ஒரு வழிமுறையை

மட்டும் பயன்படுத்தி பயனடைந்தவர்கள் ஐம்பது சதவீதத்தினருக்கும் குறைவானவர்கள்தாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளை

இணைத்துச் செய்யும்போது பலன் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
சிறிசிஸி முறையை உபயோகிக்கும்போது பாதிக்கப்பட்டவரின் வாயில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இருமல்

காரணமாக இதயத் துடிப்பு நிற்கும் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைச்சல். அதனால், சிறிசிஸி செய்யும் போது, ஒவ்வொரு முறையும்

வாயைப் பரிசோதிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

விரல்கள்
காற்றுக் குழாயில் சிக்கிக் கொண்ட பொருளை அகற்ற விரல் மூலமாக துழாவுவதால் ஏதேனும் பயன் உள்ளதா என்று இதுவரை யாரும்

ஆராயவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவரும் மீட்க முயன்றவரும் பாதிக்கப்பட்டதாக நான்கு சம்பவங்கள் உள்ளன. அதனால், விரல்கள் மூலம்

துழாவும் வழக்கம் வேண்டாம்.
மருத்துவ சிகிச்சை
நீடித்த இருமல், விழுங்குவதற்குச் சிரமம், தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வு போன்றவை ஒருவருக்கு

இருக்குமானால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அடி வயிற்றை அழுத்தும் முறை பற்றி பார்த்தோம் அல்லவா? இப்படிச செய்வதன் மூலம் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட

வாய்ப்பு உண்டு. எனவே, தகுந்த மருந்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

குழந்தைகளையும் நீரில் மூழ்கியவர்களையும் காப்பாற்றும் முறை
இருதயத் துடிப்பு நிறுத்தம் ஏற்பட்டால் உடனடியாக காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். காரணம், அது போன்ற சந்தர்பங்களில் சுவாசம்

தடைபடும் மூச்சுத்தடை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று இதற்கு முன்னால் பார்த்தோம்.

பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில், கீழ்க்கண்ட சில மாற்றங்களைச் செய்வது நல்லது.
மார்பு அழுத்தப் பயிற்சி செய்வதற்கு முன்னால் ஐந்து முறை சுவாச மீட்புச் செய்யவும்.
நீங்கள் தனியாக இருக்கும் பட்சத்தில், மாற்று உதவி கிடைப்பதற்கு முன்னால் 1 நிமிடம் சிறிசிஸி செய்யலாம்.
மார்பில் அழுத்தம் கொடுக்கவும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்க அழுத்தம் கொடுக்கலாம். ஒரு வயதுக்கு குறைந்த குழந்தையாக இருந்தால்

இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. ஒரு வயதைத் தாண்டிய குழந்தையாக இருந்தால் ஒன்று அல்லது இரு

கைகளையும் பயன்படுத்தலாம்.

நீரில் மூழ்கியவர்களுக்குச் சுவாச மீட்பு ஐந்து முறையும் சிறிசிஸி ஒரு முறையும் செய்யலாம். ஆனால் இதை எல்லேராலும் செய்ய முடியாது.

அதற்கென்றே பிரத்தியேகப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடிக்கடி பசிக்கிறதா? அதிகம் பசிக்கிறதா? இரண்டுமே ஆபத்தே…!!
Next post சுற்றுலா பயணிகளை ‘ கிலி ‘கொள்ள செய்யும் கண்ணாடி நடைபாதை..!! வீடியோ