25 லட்சம் உதவித் தொகையுடன் இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப முயற்சி..!!

Read Time:1 Minute, 53 Second

inde-1-600x338தலா ரூ.13 லட்சம் உதவித் தொகையுடன் அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி மேற்கொண்டுள்ளது.

உள் நாட்டு போர் நடை பெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.

தங்களுக்கு தஞ்சம் வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதற்கு பப்புவா நியூ கினியா சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.

அகதிகளை அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதம். எனவே அந்த முகாம்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனால் அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்பு ரூ.6½ லட்சம் உதவி தொகை வழங்கி அவர்களை அனுப்ப இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தற்போது இந்திய ரூ.13 லட்சம் வழங்கி அவர்களை அனுப்ப முயற்சி மேற் கொண்டுள்ளது.

அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதற்காக அகதிகள் நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 80 வயது கிழவனை போல் தோற்றம் அளிக்கும் 4 வயது சிறுவன்..!! (படங்கள் &வீடியோ)
Next post 3 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த இளம்பெண்..!!