ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமியை திருமணம் செய்த 60 வயது மதகுரு கைது…!!

Read Time:2 Minute, 12 Second

201607311010425862_A-60-year-old-cleric-has-been-arrested-for-allegedly_SECVPFஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் நகரில் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டியூஷன் ஆசிரியராக இருந்த கரீம்(60) என்பவர் தங்களது மகளை கடத்திச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறுகின்றனர்.

ஆனால், கடந்த ரம்ஜான் பண்டிகையன்று அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் கரீம் என்ற மதகுருவோ.., ‘நான் அந்த பெண்ணை கடத்தி வரவில்லை. எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. இவளை எங்கள் அன்பளிப்பாக உங்களிடம் ஒப்படைக்கிறோம். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் அவளை அழைத்து செல்லலாம்’ என அவளது பெற்றோர் கூறியதால் நான் எனது ஊருக்கு அழைத்து வந்தேன்’ என கூறுகிறார்.

இந்நிலையில், அந்த மதகுருவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசாரின் விசாரணைக்கு ஆஜராவதற்காக ஹேரட் நகரில் வசித்துவரும் சிறுமியின் பெற்றோர் கோர் மாகாணத்துக்கு சென்றுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்…!!
Next post அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுமியை பட்டினி போட்டு அடித்து சித்ரவதை…!!