மலச்சிக்கலை தீர்க்கும் வேர்க்கடலை..!!
வயிற்றுபோக்கை நிறுத்தக் கூடியதும், மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைவதும், ஆண் மலட்டுதன்மையை சரி செய்ய கூடியதுமான வேர்கடலையை பற்றி நாம் இன்று பார்ப்போம். வேர்கடலைக்கு நிலக்கடலை, மணிலா பயறு என்ற பெயர்கள் உண்டு. வேர்கடலை தாவரம் முழுவதும் கால்நடைகளுக்கு உணவுவாகிறது. இதன் எண்ணெய் உணவுவாகவும் மருந்தாகவும் ஆகிறது. அதிக புரதச்சத்தை கொண்டது. வேர்கடலையின் மேல் உள்ள சிவப்பு வண்ண தோல் பேதி, சீதபேதியை நிறுத்த கூடியது. ரத்தக் கசிவை தடுக்கும் தன்மையுடையது. கொழுப்பு நீக்கியாக உள்ள வேர்கடலை மலச்சிக்கலை தீர்க்க கூடியது.
உடலுக்கு வலிமையை கொடுக்கும் வேர்க்கடலை குளுமை நிறைந்தது. உள் உறுப்புகளுக்கு பலம் சேர்க்க கூடியது. வேர்க்கடலை பாகங்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். வேர்க்கடலையை வறுத்து தோல் எடுத்து கொள்ளவும். அதனுடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து, மோர் சேர்த்து பருக வேண்டும். அவ்வாறு செய்தால் சீதபேதி, அடிவயிற்றில் ஏற்படும் வலி சரியாகும். எய்ட்ஸ் எனப்படும் பால்வினை நோயை வளர்க்கும் கிருமிகளை வேர்கடலை தடுக்கிறது. கடலையின் சிவந்த நிற தோலானது ரத்தத்தை உறைய வைக்கும்.
பேதியை தடுக்கும். வேர்க்டலையை அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வயிற்றுபோக்கை கட்டுப்படுத்தும் தன்மை இந்த தோலுக்கு உண்டு. கடலை எண்ணைய் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது. அரை டம்ளர் காய்ச்சிய பாலுடன், ஒரு ஸ்பூன் வேர்க்கடலை எண்ணெய்யை சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் சரியாகும். வேர்க்கடலை கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை சமப்படுத்தும். இதய ஓட்டத்துக்கு நல்லது.
வேர்க்டலையை பயன்படுத்தி விந்தணு குறைபாடுக்கான மருந்து தயாரிக்கலாம். வேர்க்கடலையை வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். சிறிது பால் சேர்த்து கட்டியில்லாமல் கலக்க வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் நெய், பனங்கற்கண்டு சேர்த்து கிளற வேண்டும். அது களிபோன்று மாறும். இதை சாப்பிட்டால், ஆண் மலட்டுத் தன்மை சரியாகும். விந்தணுவை அதிகப்படுத்தும். அழிந்துபோன செல்களை புதுப்பிக்கும்.
உடலுக்கு ஊக்கமும் உற்சகமும் தரும் வேர்கடலை உருண்டையை சாப்பிடும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. வேர்க்கடலை இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றக்கூடியதும், காயத்தில் இருந்துவரும் ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். துளிர் இலைகளை பசையாக்கி வைத்து கொண்டு அதனுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து கசாயம் தயாரிக்கவும்.
இது காயத்தால் ஏற்படும் ரத்தபோக்கிற்கு வெளி மருந்தாகவும், உள்மருந்தாகவும் பயன்படுகிறது. இது அடிபட்ட காயங்களில் இருந்து ரத்தம் வெளியாவதை தடுக்கும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கவல்லது. வலி வீக்கத்தை தணிக்க கூடியது. வேர்கடலையின் துளிர் இலைகளை பசையாக்கி, அதனுடன் மஞ்சள்பொடி சேர்த்து நீர்விட்டு அக்கி புண்கள், பூச்சிக்கடிக்கான மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
Average Rating