முஷாரப் ஒரு விஷம் -நவாஷ்ஷெரீப்

Read Time:1 Minute, 51 Second

Musaraf-pakistan.jpgமுஷாரப் ஒரு விஷம், பாகிஸ்தானையே அவர் அழித்துவிடுவார் என்று மாஜி பிரதமர் நவாஸ்ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவராக மாஜி பிரதமர் நவாஸ்ஷெரீப் சகோதரர் ஷபாஷ்ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் நவாஸ் ஷெரீப்பை போல மறைந்து வாழ்கிறார்.

தேர்தலுக்கு பின்னர் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய நவாஸ் ஷெரீப் முஷாரப் ஒரு விஷம் என பாய்ந்தார். ராணுவ ஆட்சியாளர்கள் பாகிஸ்தானில் அமைதியை சீர்குலைத்தவர்கள் என்றார். பாவப்பட்ட மனிதரான முஷாரப்புடன் தாம் எந்த உடன்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றார்.

இது தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். முஷாரப் ஆட்சியை பிடித்த இந்த 7 வருடத்தில் ஒரு முறை கூட முஷாரப்பிடம் தாம் பேசியது கிடையாது என்றார். ஷெரீப்பும், பெனாசிரும் தங்களுக்கு சில சலுகைகள் கேட்டு அரசை அணுகியதாக செய்திகள் வெளியானதை அவர் மறுத்தார்.

பதவி ஆசை பிடித்த முஷாரப் போன்ற ராணுவ ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு ஓட வேண்டும். அப்படி ஓடவில்லையென்றால் அவர்கள் விரட்டப்படுவார்கள் என்றார்.
Musaraf-pakistan.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராணுவம்-விடுதலைப்புலிகள் மோதல் நீடிப்பு- மேலும் 21 பேர் பலி
Next post இஸ்ரேல் குண்டு வீச்சு: லெபனானின் பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது