உடலில் தேங்கியுள்ள அதிக கொழுப்பை கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவும் மீன் எண்ணெய்…!!
மது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கிடைக்கக்கூடிய கொழுப்புச்சத்தை சேமித்து வைத்துக் கொள்கின்றன. மாறாக, சிகப்பு இரத்த அணுக்களோ, அவற்றை உடலின் ஆற்றல் தேவைக்கு உதவிடும் வகையில் கொழுப்புச்சத்தை எரித்து ஆற்றல்சக்தியாக மாற்றுகின்றன.
இவ்வகையிலான, சிகப்பு அணுக்கள் நமது குழந்தைப்பருவத்தில் அபரிமிதமாக இருக்கும். ஆனால், வளரவளர இவற்றின் அளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வரும். தற்காலத்தில் மேற்கண்ட இரு அணுக்களும் அல்லாமல் தற்போது பழுப்பு நிறத்தில் மூன்றாவதாக ஒருவகை இரத்த அணுக்கள் எலி மற்றும் மனிதர்களின் இரத்தத்தில் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவதுவகை இரத்த அணுக்களும் சிகப்பு இரத்த அணுக்களைப் போலவே உடலின் ஆற்றல் தேவைக்கு உதவிடும் வகையில் கொழுப்புச்சத்தை எரித்து ஆற்றல்சக்தியாக மாற்றுகின்றன.
ஆனால் இந்த பழுப்புநிற இரத்த அணுக்களின் உற்பத்தியும் நமது வாலிப வயதுக்குப் பிறகு குறையத் தொடங்குவதால் வெள்ளை அணுக்கள் சேமித்து வைத்துக் கொள்ளும் கொழுப்பு சத்து எரிக்கப்படாமலும் ஆற்றல்சக்தியாக மாற்றம்பெறாமலும் பல ஆண்டுகாலமாக நமது உடலில் தேங்கி, தேவையற்ற கொழுப்பாக மாறி, விடுகின்றது.
இதன்விளைவாக, நடுத்தரமான வயதிலேயே உடல் பருமன் நோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில சிறப்பு உணவுவகைகளை உட்கொள்வதன் வாயிலாக நமது இரத்தத்தில் காணப்படும் மூன்றாவது வகை பழுப்புநிற அணுக்களின் உற்பத்தியையும், நீட்சியையும் அதிகரிக்கச் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக, சோதனைக் கூடத்தில் எலிகளை வைத்து ஆய்வு செய்து இந்த ஆராய்ச்சி குழுவினர், ஒரு பிரிவு எலிகளுக்கு கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், மற்றொரு பிரிவு எலிகளுக்கு கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளுடன் மீன் எண்ணையையும் சேர்த்து அளித்து பரிசோதித்து வந்தனர்.
இந்த பரிசோதனையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதர எலிகளைவிட மீன் எண்ணையுடன் சேர்த்து கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்ட எலிகள் 5-10 சதவீதம் குறைந்த எடையுடனும், 15-25 கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
மேலும், அவற்றின் வெள்ளை இரத்த அணுக்களில் பரிவு நரம்பு அமைப்பில் தூண்டுசக்தியை பாய்ச்சுகையில் அவை புதிதாக பழுப்புநிற இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், பரிவு நரம்பு அமைப்பை தூண்டுவதால் மேற்கண்ட வகையில் பழுப்புநிற அணுக்களின் உற்பத்தியை பெருக்கி, வெள்ளை அணுக்களில் நீண்டகாலமாக தேங்கியுள்ள அதிகப்படியான, தேவையற்ற கொழுப்புச்சத்தை உடலில் இருந்து ஆற்றல்சக்தியாக எரித்தும், கரைத்தும் உடலில் இருந்து வெளியேற்றலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து ஆற்றலாக மாற்றும் வளர்சிதை தொடர்பான ஜீவத்துவ பரிணாமத்தில் மீன் எண்ணெய் சிறப்பாக செயலாற்றும் என தற்போது மருத்துவரீதியாக மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வாழ்பவர்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துவருவதாக பல்லாயிரம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. மீன்போன்ற கடல்உணவு வகைகளை இவர்கள் அதிகமாக சாப்பிட்டு வந்ததே இந்த சிறப்புக்கு காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
Average Rating