இளநீரால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்…!!

Read Time:3 Minute, 57 Second

Coconut-Water-696x365இளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாத காலத்தில் அருந்துவதன் மூலம் பனிக்குடநீர் சுத்தமாகும். மேலும் குழந்தை சுத்தமான தோல், அதிக முடி மற்றும் தெளிவான கண்களுடன் பிறக்கும்.

இதுவரை எந்த ஆய்வுகளும் இதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனாலும் இளநீர் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை அளிக்கும் பல பொருட்களைக் கொண்டுள்ளது. பாரம்பரிய ஆலோசனைப்படி இதிலுள்ள பொருட்கள் மறைமுகமாக குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது

இயற்கை எலெக்ட்ரோலைட்டுகள் :
இளநீரானது எலக்ட்ரோலைட், குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றை அதிக அளவில் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையான ஐசோடோனிக் கனிம வளத்தை மிகுதியாக கொண்டிருப்பதாலும், எலக்ட்ரோலைட் இருப்பதாலும், உடலில் நீரேற்றம் மற்றும் சகிப்பு ஆற்றலை மீட்பதற்கு பயன்படுகின்றது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் நீர் அதிகம் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உண்டாகும் வறட்சியினால், நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம் மற்றும் சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் குறைப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இயற்கை நீர்ப்பெருக்கிகள்:
இயற்கை நீர்ப்பெருக்கியாக இருப்பதால், இளநீர் சிறுநீரை வெளியேற்றவும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள ஊட்டமிக்கப் பொருட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றைத் தடுக்கவும் பயன்படுகின்றது.

நோயெதிர்ப்பு சக்தி:
இளநீரில் உள்ள லாரிக் அமிலம் நோய்க்கு எதிராகப் போராட உதவுகின்றது. மேலும் இது தாய்ப்பாலின் பண்புகளான பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது படர்தாமரை, எச்.ஐ.வி, ஓரணு, ஜியார்டியா லாம்ப்லியா, கிளமீடியா மற்றும் ஹெலிகோபட்டர் போன்ற வைரஸ்களில் இருந்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றது.

செரிமான உதவி :
இளநீர் செரிமானத்தை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை உருவாக்கும். இது இரைப்பை தசையை சுருங்கச் செய்வதால் செரிமானம் தாமதமாகும். ஆனால் இளநீர் செரிமானத்தின் வேகத்தை அதிகரிக்க செய்யும்.

நல்ல கொழுப்பு அதிகரிப்பு :
ஆராய்ச்சிகளின் படி இளநீரில் கொழுப்பும் கொலஸ்ட்ராலும் இல்லை என்றும், இது நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.அராலி கிழக்கில் குடும்பஸ்தர் கழுத்தறுத்துக் கொலை…!!
Next post தீயால் வசீகரித்து பிடிக்கப்படும் மீன்கள்! இப்படியான பாரம்பரிய முறை உங்களுக்கு தெரியுமா? வீடியோ