சென்னை நர்சிங் கணவரை கொன்று வீசியது எப்படி? – கள்ளக்காதலன் நடித்து காட்டினார்…!!
கன்னியாகுமரி மாவட்டம், கல்லுவிளை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்பாபு (வயது 31) என்பவரை அவரது மனைவி நர்ஸ் அஜிதா வேலூர் மாவட்டம், அ.கட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனது காதலன் ஜான்பிரின்ஸ் (25) என்பவரை ஏவி கழுத்தை நெறித்து கொலை செய்தார்.
திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் அருகே கடந்த 7-ந்தேதி இரவு இந்த சம்பவம் நடந்தது. விருந்துக்கு வர வேண்டும் என கூறி காதலி அஜிதாவின் கணவர் ஜெகன் பாபுவை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜான் பிரின்ஸ் அழைத்து வந்தார்.
பின்னர் அவரை கொலை செய்து உடலை தண்டவாளத்தில் படுக்க வைத்துவிட்டு ரெயிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக போலீசாரை ஏமாற்ற நினைத்தது தெரிய வந்தது. ஆனால் ஜான் பிரின்சின் குட்டு வாட்ஸ் அப்பில் வெளியான படம் மூலம் அம்பலமானது.
ஜான் பிரின்சை கைது செய்த திருச்சி ரெயில்வே போலீசார், அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது ஜான் பிரின்ஸ் தனக்கும் ஜெகன்பாபுவின் மனைவி அஜிதாவிற்கும் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய போது காதல் ஏற்பட்டதாக கூறினார்.
கடந்த 2 வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால் அஜிதாவின் பெற்றோர் ஜெகன்பாபுவிற்கு கடந்த மாதம் அஜிதாவை திருமணம் செய்து கொடுத்து விட்டதால் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.
அஜிதாவும் அவரது கணவர் ஜெகன்பாபுவுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என தெரிவித்ததால் ஜெகன் பாபுவை தீர்த்துக் கட்டிவிட்டு இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்ததாக போலீசாரிடம் ஜான்பிரின்ஸ் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த ஜூலை 7-ந்தேதி இரவு 12 மணி முதல் 1 மணி வரை திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஜெகன்பாபு இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று கர்சீப்பை தண்ணீரில் நனைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதனை அரங்கேற்றியது எப்படி? என்பது குறித்து ஜான் பிரின்ஸ் போலீசாரிடம் நடித்து காண்பித்தார். அவரது உடலை தண்டவாளத்தில் படுக்க வைத்துவிட்டு நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியது எப்படி என்பது குறித்தும் ஜான்பிரின்ஸ் நடித்துக் காண்பித்தார்.
ஜான்பிரின்ஸ் நடித்துக் காண்பித்ததை திருச்சி ரெயில்வே போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதை கோர்ட்டில் தாக்கல் செய்கிறார்கள்.
இதற்கிடையே கணவர் ஜெகன்பாபுவை காதலன் ஜான்பிரின்சை ஏவி கொலை செய்த அஜிதா திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி ஜெகன்பாபுவுடன் இவருக்கு திருமணம் நடந்தது.
கணவருடன் சில நாட்களே கல்லுவிளையில் குடும்பம் நடத்திய அஜிதா விடுமுறை முடிந்ததால் சென்னை கேளம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். தனது காதலன் ஜான்பிரின்சுடன் 2 வருடமாக சுற்றி உல்லாசமாக இருந்த வாழ்க்கையை மறக்க முடியாமல் ஜெகன்பாபுவை விட்டு விட்டு சென்னைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
திருமணமாகி 30 நாட்கள் தான் ஆகிறது என்று கூடப் பார்க்காமல் ஜெகன் பாபுவை ஜான்பிரின்சை ஏவி கொலை செய்த அஜிதா சிறையில் எதுவுமே நடக்காதது போல் உள்ளதாக மகளிர் வார்டன்கள் தெரிவித்தனர். சிறையில் தனி அறையில் உள்ள அவர் சாப்பிடுவது, புத்தகம் படிப்பது என சாதாரணமாக இருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.
திருச்சியை கலக்கிய புது மாப்பிள்ளை கொலை வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் கோசல்ராம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை 14 நாட்களில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்தது. விரைவில் இவ்வழக்கில் போலீசார் திருச்சி கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
Average Rating