இதை கொண்டு தினமும் 2 முறை வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்ற பிரச்சனையே இருக்காது..!!

Read Time:4 Minute, 20 Second

23-1469255602-1-mouth-odorவாய் துர்நாற்றம் என்பது உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இப்பிரச்சனையால் ஏராளமான மக்கள் பல இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்… மேலும் வாய் துர்நாற்றம் கடுமையாக இருக்கும் போது, அதனை சரிசெய்யும் முயற்சியில் ஒருவர் ஈடுபடாவிட்டால் பின் நிலைமை மோசமாகக் கூடும்.

எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட மௌத் வாஷ்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் மௌத் வாஷைப் பயன்படுத்தினால் விரைவில் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

வாயை பராமரிப்பதில் இந்திய ஆண்கள் செய்யும் 8 தவறுகள்!!! இப்போது வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் அதனைப் போக்க உதவும் நேச்சுரல் மௌத் வாஷ் குறித்து காண்போம்.

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்

வாய் துர்நாற்றத்தின் பின்னணியில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் மோசமான வாய் சுகாதாரம், குறிப்பிட்ட உடல்நல கோளாறுகளான ஹைப்போ தைராய்டு, நீரிழிவு, ஈறு நோய்கள், ஈஸ் ட் தொற்றுகள், செரிமான கோளாறுகள், சைனஸ் பிரச்சனைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நேச்சுரல் மௌத் வாஷ்

கீழே கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் மௌத் வாஷில் சேர்க்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த மௌத் வாஷ் வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, வாயின் முழு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் பட்டைத் தூள் – 1 டீஸ்பூன் தேன் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை

இந்த மௌத் வாஷில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டிருப்பதால், இது பற்களில் படிந்துள்ள கறைகளைப் போகுவதோடு, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

தேன்

வாய் வறட்சியினாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். ஆனால் இந்த மௌத் வாஷில் சேர்க்கப்படும் தேன் வாயில் எச்சில் உற்பத்தியை அதிகரித்து, வாயை போதிய அளவு ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.

பட்டை

இந்த மௌத் வாஷில் சேர்க்கப்படும் பட்டை வாயில் ஏற்படும் கடுமையான துர்நாற்றத்தைத் தடுக்கும்.

தயாரிக்கும் முறை

* மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக ஒரு பௌலில் கலந்து கொள்ள வேண்டும்.

* வேண்டுமானால் அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

* பின் பிரஷ் செய்யும் முன் இந்த நேச்சுரல் மௌத் வாஷைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துக்க வீட்டில் ரகளை… சமாதானம் செய்யப்போன அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு- வீடியோ
Next post ஒருவரது உடலில் இரும்புச்சத்து அளவுக்கு அதிகமானால் சந்திக்கும் பிரச்சனைகள்…!!