கற்பழிப்பு வழக்கில் கைதானவர்கள் மீண்டும் அதே பெண்ணை கற்பழித்த கொடூரம்..!!

Read Time:2 Minute, 22 Second

201607191603543287_gang-molested-victim-woman-assaulted-again-by-same-men_SECVPFஅரியானாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு வழக்கில் கைதானவர்கள் மீண்டும் அதே பெண்ணை கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் பிவானியில் தலித் குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர் ஜாதியினரால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார்.

இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றவாளிகள் ஜாமினில் விடுதலையாகி இருந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த பெண்ணின் குடும்பத்துக்கு தொடர்ந்து மிரட்டல் வந்தது. இதனால் பயந்து போன அவர்கள் ஊரை காலி செய்து விட்டு ரோத்தக் நகரில் குடியேறினார்கள்.

அந்த பெண்ணுக்கு தற்போது 21 வயது ஆகிறது. அவர் ரோத்தக்கில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியை விட்டு வெளியே வந்த அவரை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர்.

அவர்கள் சுக்புரா சவுக் என்ற இடத்தில் வைத்து அவரை கூட்டாக கற்பழித்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டனர். குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த அவரை கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தற்போது அவரை கற்பழித்தவர்கள் யார்? என்று அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 5 பேர் சேர்ந்து அவரை கற்பழித்துள்ளனர். அதில் 2 பேர் ஏற்கனவே அவரை கற்பழித்து கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தில் பட்டையைக் கிளப்பும் நயன்தாராவின் புதிய வீடியோ..!!
Next post உங்க வீட்டு குட்டீஸ் அதிகமா டிவி, செல்போனில் மூழ்கிப் போறாங்களா? கவனிங்க பெற்றோர்களே…!!