மூதூரில் நடப்பதென்ன…..
இராணுவம் முகாமிற்குள் இருக்கிறார்கள் வெளியே வரவில்லை. கூடுதலாக எல்.ரி.ரி.ஈ அடிக்கிற செல் மக்கள் இருக்கிற இடங்களில் வந்து விழுந்து கன சேதம் ஏற்பட்டுள்ளது. எல்ரிரிஈ ஒரு பகுதியிலும் கடற்படை ஒருபகுதியிலும் நிற்கிறார்கள். மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தாக்குதல் நடாத்தப்போகிறோம் எங்காவது ஒரு ஒதுக்கு புறத்துக்கு ஓடுங்கள் என எல்.ரி.ரி.ஈ. யினர் கூறியுள்ளார்கள் மக்கள் அந்தரித்துப் போய் நிற்கிறார்கள் கடவுளைத் தவிர வேறு ஓரு பாதுகாப்பும் இல்லை. வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது என இடம்பெயர்ந்து பள்ளிவாசலில் தஞ்சமடைந்திருக்கும் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
தற்காப்பு நடவடிக்கை – புலிகள்
இது எங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கை இராணுவ அழுத்தத்தை தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது தற்காப்புத் தாக்குதல்தான் இப்போதும் சண்டை நடைபெறுவதால் மேலதிக விபரங்களை வெளியிடமுடியாது. தண்ணீரை வழிமறித்த மக்களின் பிரச்சினையை பேசித்தீர்த்துக் கௌ;ள அரசாங்கம் முன்வருமானால் தாக்குதல்களை தவிர்த்துக்கொள்ளலாம் என புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மூது}ரை கைப்பற்றியதாகக் கூறுவது முற்றிலும் பொய் – இராணுவம்
புலிகள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சில இராணுவ நிலைகளை கைப்பற்ற முயற்சி செய்தனர். நாங்கள் தீவிரமாக திருப்பித் தாக்கி அவர்களின் நடவடிக்கையை முறியடித்துவிட்டோம். இறந்தவர்களின் சடலங்களை கைவிட்டு சென்றுவிட்டார்கள் 5 பெண் புலிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூது}ர் நகரை புலிகள் கைப்பற்றியதாக கூறுவது முற்றிலும் பொய் என இராணுவத்தின் சார்பில் பேசிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் – எரிக் சொல்ஹெய்ம்
இரண்டு தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடனடியாக சண்டையை நிறுத்திவிட்டு சண்டை ஏற்பட காரணமான பிரச்சினைகளை பேச்சுக்கள் மூலம் தீர்வுகாண வேண்டும். போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானபோது எந்தெந்த இடத்தில் யார் யார் இருந்தார்களோ அந்தந்த இடத்திற்கு அவர்கள் திரும்பச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக தண்ணீரை திறந்து விடுமாறு அவர் புலிகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தண்ணீரை திறந்துவிட்டால் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வல
திருகோணமலையில் இராணுவத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கூறுவது சரியல்ல. பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மாவிலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டு பேர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஊடாகவே, சமாதான செயலகம் ஊடாகவே அவர்கள் உறுதியளித்தால். இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிடுவோம். அவர்கள் மூது}ரை பிடித்து மாவிலாறில் இருக்கும் படையினருக்கு தளபாடங்கள் கிடைப்பதை நிறுத்தப் பார்க்கிறார்கள் ஆனால் அது நடக்கப்போவது கிடையாது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்
Thanks…EPRLF.NET