வீடுகளை முழுமைப்படுத்தாத வறியவர்களுக்கு சீமெந்து பக்கட்கள் கையளிப்பு…!!

Read Time:2 Minute, 28 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)அம்பகமுவ பிரதேச பகுதியில் காணப்படும் தோட்ட பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் மனிதவள அபிவிருத்தி நிதியத்தியம் மற்றும் ஏனைய பொது அமைப்புகள் ஊடாக முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை இனங்கண்டு அவர்களின் வீடுகளை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ள சீமெந்து பக்கட்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோரின் வேண்டுக்கோளுக்கமைவாக அமைச்சர் சஜித் பிரமதாஸவின் வீடமைப்பு அமைச்சின் கீழ் இன்று (16) கினிகத்தேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் வறுமையை எதிர்நோக்குபவர்களில் இனங்காணப்பட்ட 102 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 1100 சீமெந்து பக்கட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்க பொது செயலாளர் எஸ்.பிலிப்குமார், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கொடிகளையும் அமைச்சர் மற்றும் ஏனையோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதலையடுத்து யாழ்.பல்கலை விஞ்ஞானபீடம் மூடப்பட்டது…!! வீடியோ
Next post தர்மபுரத்தில் தனியார் பேரூந்து மீது தாக்குதல்…!!