சந்தோஷம் அதிகரிக்க புதிய வழி! ஆராய்ச்சியில் தகவல்..!!

Read Time:1 Minute, 41 Second

happy_fruits_002.w540காய்கறி, பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது எல்லோ ருக்கும் தெரியும். அத்துடன் அவை நம்மை சந்தோஷமாகவும் வைத் திருக்கிறது என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

காய்கறி, பழங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அவற் றில் உள்ள சத்துக்கள், புற்று நோய், மாரடைப்பு போன்ற பல நோய்களை தடுக்கின்றன. இந்நிலையில், காய்கறி, பழங்கள் மனிதர்களை சந்தோஷமாகவும் வைத்திருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ ஓஸ்வால்ட் கூறும் போது, ‘‘காய்கறி, பழங்களை சாப் பிடுவதால் உடல்நலன் அதிகரிப் பதை விட, நமக்கு சந்தோஷத்தை விரைந்து அதிகரிக்க செய்கின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உணவில் காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்வது உளவியல் ரீதியாகவும் பயன் அளிப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரெட்ஸோ முஜ்சிக் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக 12,385 பேரின் உணவு பழக்க வழக்கங்களை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்க்கையை வெறுப்பவர்கள் இந்தக் காட்சியை கட்டாயம் காணவும்…!! வீடியோ
Next post மது அருந்தி விட்டு தகராறு செய்த இராணுவ சிப்பாய் கைது…!!