விலை நிர்ணயிக்கப்பட்ட 16 பண்டங்களில் 10ன் விலையை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும்..!!

Read Time:1 Minute, 56 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)அரசாங்கத்தினால் 16 பண்டங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 10 பண்டங்களின் விலைகளை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பதினாறு பண்டங்களில் பத்து பண்டங்களுக்கு வர்த்தகர்கள் மேலும் 5 ரூபா அதிக பட்சமாக சேர்த்து விற்பனை செய்ய முடியும்.

இந்தப் பண்டங்கள் பொதியிடப்பட்டிருந்தால் அவற்றுக்கு மேலும் 5 ரூபா அதிக பட்சமாக சேர்த்து விற்பனை செய்யப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைசூர் பருப்பு, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி, கடலை, பயறு, வெள்ளைச் சீனி, கோதுமை மா, காய்ந்த மிளகாய், கட்டா மற்றும் சாளை கருவாடு, மாசி உள்ளிட்ட பண்டங்களுக்கு இவ்வாறு மேலும் 5 ரூபாவினை சேர்த்துக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு 9ம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சட்டத்தின் 20(5)ம் சரத்தின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 14ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி தாக்கம்…!!
Next post 13 வருடங்களுக்கு பின் கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இலங்கை வருகை..!!