ஜப்பானிய குழந்தை பிறப்பு விகிதம் சரிவு: தொழிலாளர் பற்றாக்குறை அபாயம்…!!

Read Time:1 Minute, 58 Second

201607151158579903_Japans-birth-rate-decline-risk-of-labor-shortage_SECVPFஜப்பான் சமீபத்தில் தனது நாட்டின் மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 1968-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 தடவையாக மக்கள் தொகை குறைந்து வருகிறது.

அதே நேரத்தில் அங்கு வாழும் ஜப்பானியர்களின் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கவில்லை. குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து முதியவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்தே வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால் வருகிற 2060-ம் ஆண்டில் ஜப்பானில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். அதுவும் 40 சதவீதம் பற்றாக்குறை உருவாகும் என அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி டோக்கியோ, நகோயா மற்றும் கன்சாய் ஆகிய பெரிய நகரங்களில் மட்டுமே மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அங்கு வெளிநாட்டினர் வந்து குவிந்ததே மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.

1990-ம் ஆண்டு முதல் அங்கு வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் தங்குவதால் மக்கள் தொகை உயர்ந்துள்ளது.

ஜப்பான் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் கொள்ளாததே மக்கள் தொகை குறைவதற்கு காரணமாக கருதப்படுகிறது. எனவே ஜப்பானில் தற்போதுள்ள 10 கோடிக்கு குறையாமல் பார்த்து கொள்ள பிரதமர் ‌ஷன்ஷோ கபெ தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன்..!!
Next post பெரம்பூரில் போலீஸ்காரர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி..!!