காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு…!!

Read Time:1 Minute, 23 Second

missing1காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஆவணங்களை தயாரிப்பதற்காக சிறிது காலம் ஆணைக்குழுவின் அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பிலான சாட்சி விசாரணைகளின் பின்னர், ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமற்போனோர் தொடர்பில் சுமார் 19,000 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.

அவற்றுள் சுமார் 4000 முறைப்பாடுகள் போலியானவை என்பதால், நன்கு ஆராய்ந்த பின்னர் அந்த முறைப்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவன் கிணற்றுள் இருந்து சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா ?
Next post பள்ளி சிறுமி கடத்தி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது…!!