ஒரு பாடசாலைக்கு இரண்டு அதிபர்கள்…!!

Read Time:6 Minute, 48 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கான அதிபர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை இதுவரை தீர்க்கப்படாது தொடர்கிறது. தற்போது குறித்த பாடசாலையில் இரண்டு அதிபர்கள் கடமையில் இருக்கின்றார்கள்.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளார் 01-07-2016 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் 07-07-2016 அன்று சாந்தபுரம் கலைமகள் பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்குமாறு பெருமாள் கணேசனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் அவர் கடந்த திங்கட்கிழமை பாடசாலையின் லொக்புக் பதிவேட்டில் குறிப்பு எழுதி அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் மேற்படி அதே திகதியிடப்பட்ட கடிதம் மூலம் சாந்தபுரம் பாடசாலையில் கடமையில் உள்ள அதிபர் திருமதி சுந்தரமூர்த்தியை பன்னங்கண்டி பாடசாலையினை பொறுப்பேற்குமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளாரினால் கடிதம் அனுப்பட்டிருந்தது.

ஆனால் அவர் சாந்தபுரம் பாடசாலையினை 22-09-2014 அன்று பொறுப்பேற்று ஒரு வருடமும் பத்து மாதங்களும் கடந்த நிலையில் தன் மீது எவ்வித குற்றசாட்டுகளும், குறைபாடுகளும் இன்றி திடீரென இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிராக மேன்முறையீடு செய்திருக்கின்றார்.

எனவே தனது மேன்முறையீட்டுக்கான பதில் கிடைக்கும் வரைக்கும் சாந்தபுரம் பாடசாலையில் கடமையாற்றுமாறு கிளிநொச்சி வலயத்தினால் தகவல் வந்ததாக தெரிவித்துள்ளார்.

தனக்கு இடமாற்றம் கடிதம் கிடைத்து மறுநாளே தனது மேன்முறையீட்டை கிளிநொச்சி வலயக் கல்வித் திணைகளத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் இல்லாதுவிடத்து அடுத்த நிலை அதிகாரியாக இருக்கின்ற திருமதி புவனராஜாவிடம் எழுத்து மூலமாக அறிவித்திருக்கின்றார்.

அவரும் அதனை மாகாண கல்வித்திணைக்களத்திற்கு அனுப்பியிருக்கின்றார் அதற்கு மாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து மேன் முறையீட்டுக்கான பதில் கிடைக்கும் வரைக்கும் கடமையாற்றுமாறு பதில் அனுப்பட்டுள்ளது.

இந்த பதிலை வலயக் கல்வித்திணைக்களம் குறித்த அதிபருக்கும் அறிவித்திருந்தது. அதன்பின் அவர் தொடர்ந்தும் கடமையில் இருக்கின்றார்.

பழைய அதிபர் தரம் 2 ஐ சேர்ந்தவர், பெருமாள் கணேசன் அதிபர் தரம் 3ஐ சேர்ந்தவர் இது தொடர்பிலும் குறித்த அதிபர் கல்வி அமைச்சரை தொடர்பு கொண்டு அறிவித்த போது தங்கள் அதிபர் தரம் 2ஐ சேர்ந்தவர் என்பது தனக்கு தெரியாது என்றும் அதேவேளை தங்களின் இணக்கத்துடன்தான் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை பெருமாள் கணேசனுக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் மாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்தோ, வலயக்கல்வித்திணைக்களத்திடமிருந்தோ அனுப்படவில்லை எனவே அவர் செயலாளரின் கடிதத்துடன் கடந்த திங்கட்கிழமை பாடசலைக்கு சென்றிருக்கின்றார்.

எனவேதான் பாடசாலையில் இரண்டு அதிபர்கள் தற்போது கடமையில் இருப்பது தொடர்பில் வலயக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திருமதி புவனராஜாவிடம் வினவியபோது இந்த விடயம் தொடர்பில் தான் எவ்வித கருத்தும் கூற முடியாது என்றும் ஊடகங்களுக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாத்திரமே பதிலளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இரண்டு அதிபர்கள் கடமையாற்றுகின்ற சர்ச்சை தொடர்பில் அதனைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள் என வினவிய போது “அது அவையள் வந்து நடவடிக்கை எடுப்பினம் என்றார்” , “ யார் அவையள் எனக் கேட்டபோது செயலாளர் வந்து நடவடிக்கை எடுப்பார்” என்றதோடு தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் கல்வி அமைச்சர் பதிலளிக்கவில்லை.

எனவேதான் வட மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் அவர் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் பிரச்சினையில் தலையிட்டு தற்காலிகமாகவேனும் தீர்வு காணும் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக தாய்வான் சென்றிருக்கும் நிலையில் அமைச்சர் அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளை கொண்டு பிரச்சினைக்கு ஒரு தீர்வினை ஏற்படுத்தியிருக்கலாம், அதனைவிடுத்து அலட்சியமாக அவையள் தீர்ப்பினம் என்பது அவர் மாவட்டத்தின் கல்வியில் எந்தளவுக்கு அக்கறையினை கொண்டிருக்கின்றார் என்பதனையே வெளிப்படுத்துகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் கைகுண்டுகள் மீட்பு..!!
Next post 23 வயதில் மூன்று திருமணங்கள் – குத்தி கொன்ற மாமனார்…!!